கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்

முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹோல்டிங், வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.  
கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றார் மைக்கேல் ஹோல்டிங்

முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் ஹோல்டிங், வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 60 டெஸ்ட், 102 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய மைக்கேல் ஹோல்டிங், 391 சர்வதேச விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 1975 முதல் 1987 வரை விளையாடினார். அதன்பிறகு கிரிக்கெட் வர்ணையாளராக ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் 20 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றினார். வெளிப்படையான கருத்துகளாலும் இன, நிற வேறுபாடுகளுக்கு எதிரான தன்னுடைய வலுவான நிலைப்பாடுகளுக்காகவும் ரசிகர்கள் மத்தியில் அவருடைய வர்ணனைக்கு எப்போதும் ஆதரவும் இருக்கும். 

இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார் ஹோல்டிங். கடந்த வருடம் இதுபற்றி அவர் பேட்டியளித்ததாவது: என்னுடைய வயதில் என்னால் பயணத்தில் எவ்வளவு காலம் ஈடுபட முடியும் எனத் தெரியவில்லை. எனக்கு இப்போது 66 வயதாகிறது. என்னுடைய வயது 36, 46, 56 எல்லாம் இல்லை என்றார். 

கடந்த வருடம், ஜார்ஜ் ஃபிளாய்ட் விவகாரத்தை முன்வைத்து ஸ்கை ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இனப்பாகுபாடு குறித்து ஹோல்டிங் பேசினார். கண்ணீருடன் நிறவெறி குறித்து தன்னுடைய கருத்துகளை அவர் பகிர்ந்துகொண்டார். இதற்குச் சமூகவலைத்தளங்களில் அதிகப் பாராட்டுகள் கிடைத்தன.

ஹோல்டிங்கின் ஓய்வு பற்றி கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் கூறியதாவது: கிரிக்கெட் வர்ணனையில் அற்புதமான வாழ்க்கை அமைந்ததற்கு வாழ்த்துகள். உலகம் முழுக்க உங்கள் குரலை பல லட்சம் ரசிகர்கள் மிஸ் செய்வார்கள். நீங்கள் அளித்த வெளிப்படையான, நடுநிலைமையான கருத்துகள் எனக்குப் பிடிக்கும். உடல்நலத்தைக் கவனித்துக்கொண்டு உங்கள் ஓய்வு வாழ்க்கையை அனுபவியுங்கள் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com