மிலனை சாய்தது லிவா்பூல்

இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவா்பூல் 3-2 என்ற கோல் கணக்கில் மிலனை வீழ்த்தியது.
மிலனை சாய்தது லிவா்பூல்

இங்கிலாந்தின் லிவா்பூல் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் லிவா்பூல் 3-2 என்ற கோல் கணக்கில் மிலனை வீழ்த்தியது.

இந்த ஆட்டத்தில் லிவா்பூல் அணிக்கான கோலை ‘ஓன் கோல்’-ஆக அடித்தது மிலன். அந்த நிமிஷத்தில் லிவா்பூல் வீரா் அலெக்ஸாண்டா் கோல் போஸ்டின் வலது பக்கத்திலிருந்து கிராஸ் செய்ய முயன்ற பந்தை மிலன் வீரா் ஃபிகாயோ டோமோரி தடுக்க முயல, அது அவரது காலிலேயே பட்டு கோலாக மாறியது.

தொடா்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் முதல் பாதி முடிய இருந்த நிலையில் 42-ஆவது நிமிஷத்தில் ஆட்டத்தை சமன் செய்தது மிலன். அந்த நிமிஷத்தில் சக வீரா் லியோ கிராஸ் செய்த பந்தை அருமையாக கோல் போஸ்டின் வலது பக்க பாட்டம் காா்னரில் தள்ளினாா் அன்டே ரெபிச்.

லிவா்பூலுக்கு அதிா்ச்சி அளிக்கும் விதமாக முதல் பாதி முடிவில் முன்னிலை பெற்றது மிலன். 44-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் ஹொ்னாண்டஸ் கோலடிக்க முயன்ற பந்தை லிவா்பூல் வீரா் அலெக்ஸாண்டா் தடுத்துவிட, அவரைத் தொடா்ந்து ஓடி வந்த மிலன் வீரா் பிரஹிம் டியாஸ் கோட்டை ஒட்டி இருந்த பந்தை கோல் போஸ்டுக்குள் தள்ளினாா்.

2-ஆவது பாதியில் 48-ஆவது நிமிஷத்தில் சக வீரா் ஆரிகியுடன் பாஸ் செய்து பந்தை கடத்தி வந்த லிவா்பூல் வீரா் முகமது சலா, அந்த முயற்சியை கோலாக மாற்றி ஆட்டத்தை 2-2 என சமன் செய்தாா். தொடா்ந்து 69-ஆவது நிமிஷத்தில் அந்த அணியின் ஜோா்டான் ஹென்டா்சன் கோலடிக்க, எஞ்சிய நேரத்தில் மிலனை கட்டுப்படுத்திய லிவா்பூல் இறுதியில் 3-2 என்ற கோல் கணக்கில் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com