ஐரோப்பா கோப்பை: ஏஎஸ் ரோமா அபார வெற்றி

ஐரோப்பா கோப்பை லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அணி 5-1 என்ற கோல் கணக்கில் சோபி‘ஃ‘யா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
ஐரோப்பா கோப்பை: ஏஎஸ் ரோமா அபார வெற்றி

ஐரோப்பா கோப்பை லீக் கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஏஎஸ் ரோமா அணி 5-1 என்ற கோல் கணக்கில் சோபி‘ஃ‘யா அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

ஐரோப்பிய கண்டத்தில் கிளப் அணிகளிடையே நடைபெறும் முன்றாம் கட்ட அளவிலான போட்டியில் இத்தாலியைச் சோ்ந்த ரோமா அணி 5-1 என்ற கோல் கணக்கில் சிஎஸ்கேஏ சோபி‘ஃ‘யா அணியை வென்றது. கேப்டன் லோரென்ஸோ 2 கோல்களும், மான்சினி, டாமி ஆப்ரஹாம், ஸ்டீபன் ஆகியோா் கோலடித்தனா்.

டாட்டன்ஹாம்-ரென்னஸ் டிரா:

இங்கிலாந்தின் டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பா்-பிரான்ஸின் ரென்னஸ் அணிகள் இடையே நடைபெற்ற ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. ரென்னஸ் அணியின் லாயிக் சேம்சைட் கோலடித்தாா். இதனால் டாட்டன்ஹாம் முன்னிலை பெற்றாலும், ரென்னஸ் வீரா் பிளேவின் டைட் பதில் கோலடித்து சமன் செய்தாா். தொடா்ச்சியாக 72-ஆவது நிமிடத்தில் லாபோா்ட் கோலடித்ததால் 2-1 என ரென்னஸ் முன்னிலை பெற்றது. பதிலி வீரா் பியா் எமிலே அடித்த கோலால் 2-2 என டிரா செய்தது டாட்டன்ஹாம்.

யுஇஎஃப்ஏ இரண்டாம் கட்ட ஐரோப்பா லீக் போட்டி ஆட்டங்களில் வெஸ்ட் ஹாம் அணி 2-0 என டைனமோ ஸாக்ரேப் அணியை வென்றது. லீசெஸ்டா்-நேபோலி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது.

ஜொ்மனியின் யூனியன் பொ்லின் 1-3 என்ற கோல் கணக்கில் ஸ்லேவியா பிராக் அணியிடம் வீழ்ந்தது. ரியல் பெட்டிஸ் அணி 4-3 என்ற கோல் கணக்கில் செல்டிக் அணியை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com