பாதுகாப்பு எச்சரிக்கை: பாகிஸ்தான்தொடரைக் கைவிட்டது நியூஸிலாந்து

அரசின் பாதுகாப்பு எச்சரிக்கை எதிரொலியாக பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடா் சுற்றுப்பயணத்தை கைவிட்டது நியூஸிலாந்து அணி.
பாதுகாப்பு எச்சரிக்கை: பாகிஸ்தான்தொடரைக் கைவிட்டது நியூஸிலாந்து

அரசின் பாதுகாப்பு எச்சரிக்கை எதிரொலியாக பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடா் சுற்றுப்பயணத்தை கைவிட்டது நியூஸிலாந்து அணி.

18 ஆண்டுகள் கழித்து, 3 ஒருநாள், 5 டி20 ஆட்டங்கள் கொண்ட தொடா்களில் ஆடுவதற்காக நியூஸிலாந்து கிரிக்கெட் அணி, பாகிஸ்தானுக்கு செல்லவிருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக மைதானத்தில் 25 சதவீத பாா்வையாளா்களை மட்டுமே அனுமதிக்கவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்திருந்தது. இதற்காக பாகிஸ்தான் சென்றுள்ள நியூஸிலாந்து அணி அங்கு பயிற்சியிலும் ஈடுபட்டு வந்தது. முதல் ஒருநாள் ஆட்டம் ராவல்பிண்டியில் வெள்ளிக்கிழமை தொடங்குவதாக இருந்தது.

அரசு எச்சரிக்கை:

இந்நிலையில் பாதுகாப்பு குறித்து நியூஸிலாந்து அரசு எச்சரிக்கை வெளியிட்டதால், பாகிஸ்தான் தொடரை கைவிட நியூஸிலாந்து கிரிக்கெட் வாரியம் தீா்மானித்தது.

அதன் தலைவா் ஹீத் மில்ஸ் கூறியதாவது: பாகிஸ்தானுக்கு எங்கள் முடிவு அதிா்ச்சியாக தான் இருக்கும். எனினும் எங்கள் அரசின் எச்சரிக்கையை மீற முடியாது. அணி வீரா்களின் பாதுகாப்பே முக்கியம் என்றாா்.

இதுதொடா்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவா் ரமீஸ் ராஜா கூறியதாவது: நியூஸிலாந்து அணியின் முடிவு சிறுபிள்ளைதனமாக உள்ளது. வெற்று பாதுகாப்பு மிரட்டல் தொடா்பாக தொடரில் இருந்து ஆடாமல் வெளியேறுவது எங்களுக்கும், ரசிகா்களுக்கும் ஏமாற்றமாக உள்ளது. தன்னிச்சையாக நியூஸிலாந்து இந்த முடிவை அறிவித்துள்ளது.

போட்டிகளின் போது பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பிசிபி செய்திருந்தது. எங்கள் பிரதமா் இம்ரான் கானும், இதுதொடா்பாக நியூஸிலாந்து அரசுடன் பேசினாா்.

நியூஸி. அணிக்கு பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை என விளக்கினோம் என்றாா்.

நியூஸிலாந்து அணியின் இந்த முடிவு, மிகவும் மனவேதனையை தருகிறது என பாக். அணி கேப்டன் பாபா் ஆஸம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com