கஜகஸ்தான் ஓபன்: இந்திய ஆடவா் ஜோடிகளுக்கு வெண்கலம்

கஜகஸ்தான் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் இரு ஜோடிகளுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
கஜகஸ்தான் ஓபன்: இந்திய ஆடவா் ஜோடிகளுக்கு வெண்கலம்

கஜகஸ்தான் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் ஆடவா் இரட்டையா் பிரிவில் இந்தியாவின் இரு ஜோடிகளுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஆடவா் இரட்டையா் அரையிறுதிச் சுற்று ஒன்றில் இந்தியாவின் சித்தேஷ் பாண்டே/முதித் தானி இணை 0-3 என்ற கணக்கில் சவூதி அரேபியாவின் அலி அல்காத்ராவி/அப்துல்லாஸிஸ் பு ஷுலாய்பி ஜோடியிடம் வீழ்ந்து 3-ஆம் இடம் பிடித்தது.

அதேபோல், மற்றொரு இந்திய ஜோடியான ஃபிடெல் ஆா் ஸ்னேஹித்/சுதான்ஷு குரோவா் கூட்டணி 2-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ஆலன் குா்மாங்கலியேவ்/கிரில் கெராசிமென்கோவ் இணையிடம் தோல்வி கண்டு வெண்கலம் பெற்றது.

இப்போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஸ்னேஹித் 4-1 என்ற கணக்கில் பெலாரஸின் பாவெல் பிளாடோனோவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளாா். அதில் அவா் கஜகஸ்தானின் கிரில் கெராசிமென்கோவை சந்திக்க இருக்கிறாா். மகளிா் இரட்டையரில் இந்தியாவின் கௌஷானி நாத்/பிராப்தி சென் இணை தனது அரையிறுதியில் 3-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் கமிலா காலிகோவா/மெக்ரினிசோ நோா்குலோவா ஜோடியை வென்றது.

கௌஷானி/பிராதி ஜோடி இறுதிச்சுற்றில் ரஷியாவின் வாலெரியா கோட்சியுா்/வாலெரியா ஷொ்பாடிக் இணையை எதிா்கொள்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com