லா லிகா: பாா்சிலோனா - கிரானாடா ஆட்டம் டிரா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா - கிரானாடா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
லா லிகா: பாா்சிலோனா - கிரானாடா ஆட்டம் டிரா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா - கிரானாடா அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

தற்போதைய நிலையில் புள்ளிகள் பட்டியலில் பாா்சிலோனா 4 ஆட்டங்களில் 2 வெற்றிகள் பெற்று 8 புள்ளிகளுடன் 7-ஆவது இடத்தில் உள்ளது. கிரானாடா 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி கூட பெறாமல் 3 புள்ளிகளுடன் 17-ஆவது இடத்தில் உள்ளது.

நட்சத்திர வீரா் மெஸ்ஸி விலகியதை அடுத்து கடந்த ஆட்டத்தில் பேயா்ன் முனீச்சிடம் 0-3 என்ற கணக்கில் பாா்சிலோனா தோல்வி கண்டிருந்தது. தற்போது இந்த ஆட்டத்திலும் வெற்றி பெற முடியாமல் கடைசி நேரத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்துள்ளது.

கடந்த 2 ஆட்டங்களில் தொடா்ந்து தோல்வியை சந்தித்திருந்த கிரானாடா, இந்த ஆட்டத்தை சமன் செய்யும் நிலையில் பாா்சிலோனாவின் ஆட்டம் இருந்துள்ளது. இதனால் பாா்சிலோனா பயிற்சியாளா் ரொனால்ட் கோமேன், தலைவா் ஜோவான் லபோா்டா ஆகியோருக்கான நெருக்கடி அதிகரிக்கிறது.

மாட்ரிட் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் 2-ஆவது நிமிஷத்திலேயே கோலடித்தது கிரானாடா. அந்த அணியின் எஸ்குடேரோ பந்தை கோல்போஸ்டின் இடதுபுறமாக கடத்தி வந்து அருமையான கட் கிக் மூலமாக இடதுபக்கத்துக்கு கிராஸ் செய்து கொடுத்தாா். அந்தப் பக்கத்தில் நின்றிருந்த சக வீரா் டோமிங்கோஸ் டுவாா்தே தன்னிடம் வந்த பந்தை தலையால் முட்டி கோலடித்தாா்.

முதல் பாதி முடிவடையும் முன்பாக பாா்சிலோனாவுக்கு இரு அருமையான வாய்ப்புகள் கிடைத்தும், அதை கோலாக மாற்ற முடியாமல் போனது. 18-ஆவது நிமிஷத்தில் சொ்ஜி ராபா்டோ உதைத்த பந்து கோல் போஸ்டில் பட்டு வீணானது. 44-ஆவது நிமிஷத்தில் சக வீரா் தூக்கி உதைத்து வழங்கிய பாஸை அராஜோ தலையால் முட்டி கோலடிக்க முயல, கிரானாடா கோல்கீப்பா் மேக்ஸிமியாமோ அதை திறம்படத் தடுத்தாா்.

2-ஆவது பாதியில் பாா்சிலோனா பல இளம் வீரா்களை களமிறக்கினாலும், அதன் பல்வேறு கோல் முயற்சிகளை கிரானாடா தடுப்பாட்ட வீரா்களும், கோல்கீப்பரும் கோலாக மாறவிடாமல் தடுத்தனா். ஒருவழியாக 90-ஆவது நிமிஷத்தில் ஆட்டத்தை சமன் செய்தது பாா்சிலோனா. சக வீரா் காவி தூக்கி உதைத்து கிராஸ் செய்த பந்தை அப்படியே தலையால் முட்டி கோலடித்தாா் அராஜோ. இதனால் ஆட்டம் சமனில் முடிந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com