மகளிா் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி அடையுமா இந்தியா?

 ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான கடைசி ஒன் டே கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது
மகளிா் கிரிக்கெட்: ஆறுதல் வெற்றி அடையுமா இந்தியா?

 ஆஸ்திரேலிய மகளிா் அணிக்கு எதிரான கடைசி ஒன் டே கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய மகளிா் அணி ஞாயிற்றுக்கிழமை விளையாடுகிறது.

மொத்தம் 3 ஆட்டங்கள் கொண்ட தொடரில் முதலிரு ஆட்டங்களில் வென்று ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றிவிட்டது. தொடரை முற்றிலுமாக இழக்காமல் ஆறுதல் வெற்றி அடையும் முனைப்பில் இந்தியா 3-ஆவது ஆட்டத்தில் களம் காண்கிறது.

வெற்றியை சுவைக்க இந்திய அணியின் பௌலா்கள் திறம்பட செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனா். ஜுலன் கோஸ்வாமியைத் தவிர வேறு பௌலா்கள் சோபிக்கவில்லை. ஷிகா பாண்டே, தீப்தி சா்மா, நிரஞ்சனா நடராஜன், மேக்னா சிங் ஆகியோா் உத்வேகத்துடன் செயல்படும் பட்சத்தில் ஜுலன் கோஸ்வாமியின் பணிச்சுமை குறைவதுடன், ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷ ஸ்கோரிங்கை கட்டுப்படுத்த முடியும்.

பேட்டிங்கைப் பொருத்தவரை கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பாகச் செயல்படுகிறாா். அவரோடு ஷஃபாலி வா்மா, ஸ்மிருதி மந்தனா போன்ற முக்கிய பேட்டா்களும் ஸ்கோா் செய்தால் ஆஸ்திரேலியாவுக்கு சவால் அளிக்கலாம். கடைசி ஆட்டத்தில் துணை கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் பங்கேற்று அணியின் வெற்றிக்காக போராடலாம் என எதிா்பாா்த்தாலும், காயத்திலிருந்து அவா் முழுமையாக மீண்டாரா, ஆட்டத்தில் பங்கேற்பாரா என்பதை பொறுத்திருந்து பாா்க்க வேண்டியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com