டெஸ்ட் கிரிக்கெட்டில் அற்புதங்களைச் செய்தவர் மொயீன் அலி: ஜோ ரூட்

​டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயீன் அலி அற்புதமான விஷயங்களைச் செய்தவர் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயீன் அலி அற்புதமான விஷயங்களைச் செய்தவர் என இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் மொயீன் அலி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக திங்கள்கிழமை அறிவித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 2014-இல் அறிமுகமான மொயீன் அலி 64 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். பந்துவீச்சில் 195 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 5 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பேட்டிங்கில் 5 சதங்கள் அடித்துள்ளார்.

மொயீன் அலி ஆடிய 64 டெஸ்ட் ஆட்டங்களில் 27 ஆட்டங்களுக்கு ஜோ ரூட் கேப்டனாக செயல்பட்டுள்ளார்.

அவரது ஓய்வு குறித்து ஜோ ரூட் தெரிவித்துள்ளது:

"டெஸ்ட் கிரிக்கெட்டில் சில அற்புதமான விஷயங்களைச் செய்துள்ளார். இணைந்து விளையாடுவதற்கு அவர் ஒரு சிறந்த வீரர். அவருடன் ஓய்வறையைப் பகிர்ந்ததை முழுமையாக அனுபவித்துள்ளோம். களத்திலும், களத்துக்கு வெளியேவும் எங்களுக்கு நிறைய அற்புதமான நினைவுகள் உள்ளன."

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி வரும் மொயீன் அலி தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com