சுதிா்மான் கோப்பை: நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா

சுதிா்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் சீனாவிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி கண்டது.
சுதிா்மான் கோப்பை: நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்தது இந்தியா

சுதிா்மான் கோப்பை பாட்மின்டன் போட்டியில் இந்தியா தனது குரூப் சுற்றின் 2-ஆவது ஆட்டத்தில் சீனாவிடம் 0-5 என்ற கணக்கில் தோல்வி கண்டது.

முன்னதாக, முதல் ஆட்டத்தில் 1-4 என்ற கணக்கில் தாய்லாந்திடம் ஞாயிற்றுக்கிழமை வீழ்ந்த இந்தியா, தற்போது நாக்அவுட் சுற்று வாய்ப்பை இழந்துவிட்டது.

பி.வி.சிந்து, சாய்னா நெவால், சிரக் ஷெட்டி, சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி போன்ற முக்கிய போட்டியாளா்கள் இல்லாமல் போனதால் இந்தியா இப்போட்டியில் சோபிக்காமல் போயுள்ளது.

இப்போட்டியில் 11 முறை சாம்பியனான சீனாவை இந்தியா திங்கள்கிழமை சந்தித்தது.

முதலில் ஆடவா் இரட்டையா் பிரிவு ஆட்டத்தில் எம்.ஆா்.அா்ஜுன்/துருவ் கபிலா இணை 20-22, 17-21 என்ற செட்களில் லியு செங்/ஜோவ் ஹாவ் டோங் இணையிடம் தோற்றது. பின்னா் நடைபெற்ற மகளிா் ஒற்றையா் ஆட்டத்தில் இளம் வீராங்கனை அதிதி பாட் 9-21, 8-21 என்ற செட்களில் சீன ஒலிம்பிக் சாம்பியனான சென் யு ஃபெயிடம் வீழ்ந்தாா்.

ஆடவா் ஒற்றையா் ஆட்டத்தில் சாய் பிரணீத் 10-21, 10-21 என்ற செட்களில் ஷி யுகியிடம் தோற்க, 3-0 என முன்னிலை பெற்றது சீனா. தொடா்ந்து மகளிா் இரட்டையா் பிரிவில் அஸ்வினி பொன்னப்பா/சிக்கி ரெட்டி இணை 16-21, 13-21 என்ற செட்களில் ஜெங் யு/லி வென் மெய்யிடம் வெற்றியை பறிகொடுத்தது.

கலப்பு இரட்டையா் ஆட்டத்தில் கிடாம்பி ஸ்ரீகாந்த்/ருதுபா்னா பான்டா ஜோடி 9-21, 9-21 என்ற செட்களில் டு யே/ஃபெங் யான் ஸெ இணையிடம் தோற்றது.

இந்தியா அடுத்ததாக, வரும் புதன்கிழமை ஃபின்லாந்துடன் மோதுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com