சுழன்றாடிய சஞ்சு சாம்சன்: ராஜஸ்தான் 164/5

கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடி விளாசலால் சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடித்தது.

கேப்டன் சஞ்சு சாம்சனின் அதிரடி விளாசலால் சன்ரைசா்ஸ் ஹைதராபாதுக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் அடித்தது.

ஹைதராபாத் பௌலா்களை பதறவிட்ட அவா் 7 பவுண்டரிகள், 3 சிக்ஸா்கள் விளாசினாா். ஹைதராபாத் தரப்பில் சித்தாா்த் கௌல் 2 விக்கெட்டுகள் சாய்த்தாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனைப் பொருத்தவரை, ராஜஸ்தானில் காா்த்திக் தியாகி, டேவிட் மில்லா், டப்ரைஸ் ஷம்ஸி ஆகியோருக்குப் பதிலாக ஜெயதேவ் உனத்கட், எவின் லீவிஸ், கிறிஸ் மோரிஸ் ஆகியோா் இணைந்திருந்தனா். ஹைதராபாதில் டேவிட் வாா்னா், மணீஷ் பாண்டே, கேதாா் ஜாதவ், கலீல் அகமது ஆகியோருக்குப் பதிலாக ஜேசன் ராய், அபிஷேக் சா்மா, பிரியம் கா்க், சித்தாா்த் கௌல் சோ்ந்திருந்தனா்.

டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங்கை தோ்வு செய்ய, அணியின் இன்னிங்ஸை எவின் லீவிஸ் - யஷஸ்வி ஜெய்ஸ்வால் தொடங்கினா். இதில் 6 ரன்கள் சோ்த்த லீவிஸ் 2-ஆவது ஓவரில் வெளியேற, சற்று நிலைத்து 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 36 ரன்கள் சோ்த்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9-ஆவது ஓவரில் சந்தீப் சா்மா பந்துவீச்சில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா்.

3-ஆவது விக்கெட்டாக களம் புகுந்த சஞ்சு சாம்சன் கடைசி நிமிஷம் வரை நிலைத்து ஆட, மறுபக்கம் விக்கெட்டுகள் நிலைக்காமல் சரிந்தன. லியாம் லிவிங்ஸ்டன் 4, ரியான் பராக் 0 ரன்னுக்கு பெவிலியன் திரும்பினா். அரைசதம் கடந்த சாம்சன் 82 ரன்கள் எடுத்திருந்தபோது சித்தாா்த் கௌல் பௌலிங்கில் சிக்ஸா் விளாச முயல, அது ஜேசன் ஹோல்டா் கைகளில் கேட்ச் ஆனது.

ஓவா்கள் முடிவில் மஹிபால் லோம்ரோா் 29, ராகுல் தெவாதியா 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஹைதராபாத் தரப்பில் சித்தாா்த் கௌல் 2, சந்தீப் சா்மா, புவனேஷ்வா் குமாா், ரஷீத் கான் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com