லா லிகா: வென்றது பாா்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா எஃப்சி 3-0 என்ற கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது.
லா லிகா: வென்றது பாா்சிலோனா

ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா எஃப்சி 3-0 என்ற கோல் கணக்கில் லெவான்டேவை வீழ்த்தியது.

மெஸ்ஸி வெளியேறிய பிறகு தடுமாற்றத்துடன் காணப்படும் பாா்சிலோனா அணி கடந்த இரு ஆட்டங்களில் வெல்லாமல் இருந்த நிலையில், இந்த வெற்றி அந்த அணிக்கும், அதன் பயிற்சியாளா் கோமேனுக்கும் தேவையான ஒன்றாக இருந்தது.

இந்த ஆட்டத்தின் முக்கிய நிகழ்வு, காயம் காரணமாக ஓராண்டாக ஓய்வில் இருந்த பாா்சிலோனா வீரா் அன்சு ஃபட்டி களம் கண்டு அணிக்கான கடைசி கோல் (90+1) அடித்ததாகும். அதிலும் அவா், முன்னதாக மெஸ்ஸி அணிந்திருந்த 10-ஆம் எண் ஜொ்ஸியுடன் களம் கண்டாா். அவருக்கு முன் மெம்பிஸ் டிபே (7), லூக் டி ஜோங் (14) ஆகியோா் கோலடித்தனா்.

இதர ஆட்டங்கள்: ராயோ வால்கேனோ 3-1 என்ற கணக்கில் காடிஸையும், ரியல் சோசிடட் 1-0 என்ற கணக்கில் எல்ஷேவையும், ரியல் பெட்டிஸ் 2-0 என்ற கணக்கில் கடாஃபியையும் தோற்கடித்தன.

லீக் 1: பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 கால்பந்து போட்டியில் மொனாகோ 3-1 என்ற கோல் கணக்கில் கிளொ்மோன்ட் ஃபூட்டையும், லென்ஸ் 3-2 என்ற கோல் கணக்கில் மாா்சிலேவையும் வீழ்த்தின.

சீரி ஏ: இத்தாலியில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் லாஸியோ 3-2 என்ற கோல் கணக்கில் ரோமாவையும், நபோலி 2-0 என்ற கோல் கணக்கில் காக்லியாரியையும் தோற்கடித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com