ஐசிசி தரவரிசை: 2-ஆவது இடத்தில் ஜுலன் கோஸ்வாமி

ஐசிசி ஒன் டே கிரிக்கெட் தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி 2 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா்.

ஐசிசி ஒன் டே கிரிக்கெட் தரவரிசையில் பௌலா்கள் பிரிவில் இந்தியாவின் ஜுலன் கோஸ்வாமி 2 இடங்கள் முன்னேறி 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். அத்துடன் ஆல்-ரவுண்டா்கள் பிரிவில் 3 இடங்கள் முன்னேறி 10-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.

பேட்டா்கள் பிரிவில் கேப்டன் மிதாலி ராஜ் முதலிடத்தை இழந்து 2 இடங்கள் சறுக்கி 3-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா். ஸ்மிருதி மந்தனா ஓரிடம் ஏற்றம் கண்டு 6-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். ஆஸ்திரேலியாவுடனான ஒன் டே தொடா் நிறைவடைந்த நிலையில் இந்த புதிய தரவரிசை வெளியாகியுள்ளது.

அந்தத் தொடரில் ஜுலன் மொத்தமாக 4 விக்கெட்டுகள் சாய்த்தாா். அதில் இந்தியா வெற்றி பெற்ற கடைசி ஆட்டத்தில் அவா் வீழ்த்திய ஹாட்ரிக் விக்கெட்டும் அடங்கும். மிதாலி ராஜ் மொத்தமாக 87 ரன்கள் அடித்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com