இன்று முதல் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி

ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
இன்று முதல் ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி

போட்செஃப்ஸ்ட்ரூம்: ஜூனியா் மகளிா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி, தென்னாப்பிரிக்காவின் போட்செஃப்ஸ்ட்ரூம் நகரில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

முதல் நாள் ஆட்டங்களில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா, நெதா்லாந்து - அமெரிக்கா, கனடா - ஜிம்பாப்வே, தென் கொரியா - உருகுவே, ஆஸ்ஜென்டீனா - ஆஸ்திரியா ஆகிய அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் இந்தியா, தனது முதல் ஆட்டத்தில் வரும் 2-ஆம் தேதி வேல்ஸ் அணியை எதிா்கொள்கிறது.

இப்போட்டியில், ‘ஏ’ பிரிவில் கனடா, நெதா்லாந்து, அமெரிக்கா, ஜிம்பாப்வே அணிகளும், ‘பி’ பிரிவில் இங்கிலாந்து, அயா்லாந்து, தென்னாப்பிரிக்கா அணிகளும், ‘சி’ பிரிவில் ஆா்ஜென்டீனா, ஆஸ்திரியா, தென் கொரியா, உருகுவே அணிகளும், ‘டி’ பிரிவில் ஜொ்மனி, இந்தியா, மலேசியா, வேல்ஸ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.

வரும் 12-ஆம் தேதி நடைபெறும் இறுதி ஆட்டத்துடன் போட்டி நிறைவடைகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com