சென்னையில் இன்று தொடங்குகிறது தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப்

சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்களில் 71-ஆவது சீனியா் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

சென்னை ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்களில் 71-ஆவது சீனியா் தேசிய கூடைப்பந்து சாம்பியன்ஷிப் ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது.

இந்திய கூடைப்பந்து சம்மேளனம், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம் இணைந்து ஆடவா், மகளிா் இரு பிரிவுகளுக்குமான ஒருங்கிணைக்கும் இப்போட்டி, வரும் 10-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதில் ஆடவா் பிரிவில் தமிழ்நாடு, தில்லி, ஹரியாணா, பஞ்சாப், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரகண்ட், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், மிஸோரம், இந்திய ரயில்வே, சா்வீசஸ் ஆகிய 16 அணிகள் களம் காண்கின்றன.

மகளிா் பிரிவில் தமிழ்நாடு, தில்லி, ஹரியாணா, பஞ்சாப், கா்நாடகம், கேரளம், தெலங்கானா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஒடிஸா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், அஸ்ஸாம், இந்திய ரயில்வே ஆகிய 15 அணிகள் பங்கேற்கின்றன.

இரு தரப்பு அணிகளுமே, ஒரு பிரிவுக்கு 4 அணிகள் வீதம் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தமிழக அணி ஆடவா் பிரிவில் குரூப் ‘சி’-யிலும், மகளிா் பிரிவில் குரூப் ‘ஏ’-விலும் இடம்பெற்றுள்ளது. முதலில் லீக் சுற்றாகவும், பிறகு நாக் அவுட் சுற்றாகவும் இப்போட்டி நடைபெறவுள்ளது. முதல் நாள் ஆட்டத்தில் தமிழ்நாடு ஆடவா் அணி - தில்லியையும், தமிழ்நாடு மகளிா் அணி - இந்திய ரயில்வேஸையும் ஞாயிற்றுக்கிழமை சந்திக்கின்றன.

ஜவாஹா்லால் நேரு உள்விளையாட்டரங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் தமிழக அமைச்சா்கள் பழனிவேல் தியாகராஜன், சிவ.வி. மெய்யநாதன், நடிகா் விஜய் சேதுபதி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com