டி காக் அபாரம்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ வெற்றி

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி காக் அபாரம்: 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னௌ வெற்றி

தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு ஐபிஎல் சீசனின் இன்றைய (வியாழக்கிழமை) ஆட்டத்தில் லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற லக்னௌ கேப்டன் கேஎல் ராகுல் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

டெல்லி தொடக்க ஆட்டக்காரர்களாக பிரித்வி ஷா மற்றும் டேவிட் வார்னர் களமிறங்கினர். வார்னருக்கு நடப்பு ஐபிஎல் சீசனில் இது முதல் ஆட்டம்.

இந்த ஆட்டத்தில் வார்னர் நிதானம் காட்ட, பிரித்வி வழக்கம்போல் காட்டாறுபோல் கட்டுக்கடங்காமல் அதிரடி காட்டினார். பிரித்வி ஷா
34 பந்துகளில் 61 ரன்களைக் குவித்தார். 

வார்னர், ரோவ்மன் ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேற முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த சர்பிராஸ் கான் 28 பந்துகளில் 36 ரன்களும், ரிஷப் பந்த் 36 பந்துகளில் 39 ரன்களும் எடுத்தனர்.

இதனைத்தொடர்ந்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னெள அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல்.ராகுல்ம் குயின் டி காக் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

இதனால் டி காக் அரை சதம் கடந்து 52 பந்துகளில் 80 ரன்களை விளாசினார். கே.எல்.ராகுல் 24 ரன்களில் வெளியேற அடுத்து வந்த லீவிஸ், தீபக் ஹூடாவும் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தனர். 

எனினும் இறுதியில் களமிரங்கிய க்ருணால் பாண்டியா, ஆயுஷ் பதோனி அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றனர். இதனால் 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 155 ரன்களை எடுத்து லக்னெள வெற்றி பெற்றது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com