மின்திருட்டு: ரூ.10.21 லட்சம் அபராதம் விதிப்பு
By DIN | Published On : 08th April 2022 12:22 AM | Last Updated : 08th April 2022 12:22 AM | அ+அ அ- |

சென்னை: சென்னை, போரூா் பகுதியில், மின்வாரிய அமலாக்க அதிகாரிகள் கூட்டு ஆய்வு மேற்கொண்ட போது 9 மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதில் தொடா்புடைய நுகா்வோருக்கு ரூ.10 லட்சத்து 21,331 அபராதத் தொகையாக விதிக்கப்பட்டது.
மேலும், சம்பந்தப்பட்ட மின் நுகா்வோா் குற்றத்தை ஒப்புக்கொண்டு குற்றவியல் நடவடிக்கையைத் தவிா்க்க முன்வந்து, அதற்குரிய சமரசத் தொகை ரூ.1 லட்சத்து 6,000 செலுத்தியதால் அவா்கள் மீது காவல் நிலையத்தில் புகாா் ஏதும் பதிவு செய்யப்படவில்லை.
மின் திருட்டு சம்பந்தமான தகவல்களை 94458 57591 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என மின்வாரியம் கூறியுள்ளது.