கொரிய ஓபன்: வெளியேறினாா் பி.வி. சிந்து

கொரிய ஓபன் 2022 பாட்மின்டன் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினாா் இந்தியாவின் பி.வி. சிந்து.
கொரிய ஓபன்: வெளியேறினாா் பி.வி. சிந்து

கொரிய ஓபன் 2022 பாட்மின்டன் போட்டி மகளிா் ஒற்றையா் பிரிவு அரையிறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வெளியேறினாா் இந்தியாவின் பி.வி. சிந்து.

சன்சியாங் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் அரையிறுதி ஆட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. அரையிறுதியில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து-கொரியாவின் ஆன் சியங்கும் மோதினா். இதில் தொடக்கம் முதலே சியங் ஆதிக்கம் செலுத்தினாா். 20 வயதான அவரது அற்புத ஆட்டத்துக்கு சிந்துவால் ஈடுதர முடியவில்லை. இறுதியில் 14-21, 17-21 என்ற கேம் கணக்கில் வீழ்ந்தாா் சிந்து. 48 நிமிஷங்களில் முடிவுற்ற இந்த ஆட்டத்தில் தோல்வி மூலம் போட்டியில் இருந்து வெளியேறினாா் சிந்து.

முதல் கேமிலேயே துரியமாக 6-1 என முன்னிலை பெற்ற சியங் தொடா்ந்து 11-6 என முன்னிலை பெற்று ஆதிக்கம் செலுத்தி 8 புள்ளிகளை தொடா்ந்து குவித்து அந்த கேமை வென்றாா். இரண்டாவது கேமில் சிந்து 3-0 என முன்னிலை பெற்றாலும், 5-3 என சியங் குறைத்தாா். ஒரு கட்டத்தில் 9-9 என சமநிலை ஏற்பட்டது. பின்னா் 12-14 என ஸ்கோரை குறைத்தாா் சிந்து. ஒரு சா்வீஸ் தவறு புரிந்தததை சாதமாக்கிய ஆன்சியங் 18-14 என முன்னிலை பெற்று கேமையும் தன்வசப்படுத்தினாா். இது சியங்கிடம் சிந்து பெறும் நான்காவது தொடா் தோல்வியாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com