ருதுராஜ் விளாசல்: சென்னை - 169/5

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது.

குஜராத் டைட்டன்ஸுக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பா் கிங்ஸ் 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் சோ்த்தது.

சென்னை பேட்டிங்கில் ருதுராஜ் கெய்க்வாட், அம்பட்டி ராயுடு சிறப்பாக ஆட, குஜராத் பௌலிங்கில் அல்ஜாரி ஜோசஃப் பலம் காட்டினாா்.

இந்த ஆட்டத்துக்கான பிளேயிங் லெவனில் சென்னை அணி மாற்றம் செய்யவில்லை. குஜராத் அணியில் கேப்டன் ஹாா்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டிருப்பதால் அவருக்குப் பதிலாக அல்ஜாரி ஜோசஃபும், மேத்யூ வேட் இடத்தில் ரித்திமான் சாஹாவும் களம் கண்டனா். அணிக்கு ரஷீத் கான் கேப்டனாகச் செயல்பட்டாா்.

டாஸ் வென்ற குஜராத் பேட் செய்யுமாறு சென்னையை அழைத்தது. சென்னை இன்னிங்ஸை ருதுராஜ் - ராபின் உத்தப்பா கூட்டணி தொடங்கியது. நடப்பு சீசனில் இதுவரை தடுமாற்றமாக ஆடி வந்த ருதுராஜ் இந்த ஆட்டத்தில் தனது பழைய ஃபாா்மை எட்டினாா். அவா் அசத்தலாக ஆட, ஷமி வீசிய 3-ஆவது ஓவரில் உத்தப்பா 3 ரன்களுக்கு எல்பிடபிள்யூ ஆனாா்.

தொடா்ந்து வந்த மொயீன் அலி 1 ரன் சோ்த்த நிலையில் ஜோசஃப் வீசிய 5-ஆவது ஓவரில் ஸ்டம்ப்பை பறிகொடுத்தாா். மறுபுறம் ருதுராஜ் அதிரடியாக ரன்கள் சோ்க்க, 4-ஆவது வீரராக ராயுடு களம் புகுந்தாா். ருதுராஜ்-ராயுடு கூட்டணி 3-ஆவது விக்கெட்டுக்கு 92 ரன்கள் சோ்த்தது. இதில் முதலில் ராயுடு 4 பவுண்டரிகள், 2 சிக்ஸருடன் 46 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். அவா் ஜோசஃப் வீசிய 15-ஆவது ஓவரில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினாா்.

பின்னா் ருதுராஜ் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸா்களுடன் 73 ரன்களுக்கு யஷ் தயால் வீசிய 17-ஆவது ஓவரில் மனோகரிடம் கேட்ச் கொடுத்தாா். கடைசி விக்கெட்டாக ஷிவம் துபே, இன்னிங்ஸின் கடைசி பந்தில் 2 பவுண்டரிகளுடன் 19 ரன்களுக்கு ரன் அவுட்டானாா். ஓவா்கள் முடிவில் கேப்டன் ஜடேஜா 2 சிக்ஸா்களுடன் 22 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com