சிக்ஸர் மன்னன்: வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சாதித்த பொலார்ட்

சிக்ஸர் மன்னன்: வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் சாதித்த பொலார்ட்

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார் 34 வயது மேற்கிந்தியத் தீவுகளின் ஆல்ரவுண்டர் பொலார்ட்.

2007 முதல் 123 ஒருநாள், 101 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார் பொலார்ட். ஒருநாள் கிரிக்கெட்டில் 2706 ரன்களும் டி20யில் 1569 ரன்களும் எடுத்துள்ளார். 

வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பொலார்ட் நிகழ்த்திய சாதனைகள்

* கடந்த 15 வருடங்களில் 224 சர்வதேச ஆட்டங்களில் விளையாடியுள்ளார் பொலார்ட். டெஸ்டில் விளையாடாமல் அதிக சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய வீரர்களில் பொலார்டுக்கு 2-வது இடம். தென்னாப்பிரிக்காவின் டேவிட் மில்லர், 238 ஆட்டங்களுடன் இப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

* அதிக டி20 சர்வதேச ஆட்டங்களில் விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் வீரர், பொலார்ட். 101 ஆட்டங்கள். டெஸ்டில் இடம்பெறாமல் 100 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடிய ஒரே வீரரும் பொலார்ட் தான். 

* சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்த இருவரில் பொலார்டும் ஒருவர். யுவ்ராஜ் சிங் இதைத் தொடங்கி வைத்தார். கடந்த வருடம் இலங்கையின் அகிலா தனஞ்ஜெயா ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்தார் பொலார்ட். 

* ஒருநாள் கிரிக்கெட்டில் 123 ஆட்டத்தில் 135 சிக்ஸர்கள் அடித்துள்ளார் பொலார்ட். விகிதாச்சார அடிப்படையில் ஒரு இன்னிங்ஸுக்கு 1.2 சிக்ஸர்கள். குறைந்தது 100 சிக்ஸர்கள் அடித்தவர்களில் இந்த எண்ணிக்கை வைத்திருப்பவர் இவர் மட்டும்தான். அடுத்த இடத்தில் கெய்ல், 1.13.

* ஒருநாள் கிரிக்கெட்டில் 21.23 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர் அடித்துள்ளார் பொலார்ட். சிக்ஸர்கள் அடிப்பதில் பந்துகளின் அடிப்படையில் முதலிடத்தில் உள்ளவர் அப்ரிடி. 19.64 பந்துகளுக்கு ஒரு சிக்ஸர்.  

* ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 2-வது மே.இ. தீவுகள் பொலார்ட். 135 சிக்ஸர்கள். கெயில் 298 ஆட்டங்களில் 330 சிக்ஸர்கள் அடித்துள்ளார். 

* டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் அடித்த 3-வது மே.இ. தீவுகள் வீரர், பொலார்ட். 99 சிக்ஸர்கள். கெயில் 124 சிக்ஸர்களும் எவின் லூயிஸ் 110 சிக்ஸர்களும் அடித்துள்ளார்கள். 

* டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 50 சிக்ஸர்களுக்கும் அதிகமாக அடித்தவர்களில் பவுண்டரிகளை விட அதிகமாக சிக்ஸர்கள் அடித்த மூவரில் பொலார்டும் ஒருவர். 99 சிக்ஸர்களும் 94 பவுண்டரிகளும் அடித்துள்ளார். (ரஸ்ஸல் 62 சிக்ஸர்கள், 42 பவுண்டரிகள் & எவின் லூயிஸ் 110 சிக்ஸர்கள், 106 பவுண்டரிகள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com