ஆசியக் கோப்பை ஹாக்கி 2022: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்

ஆசியக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி 2022-இன் முதல் ஆட்டத்தில் இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதுகின்றன.
ஆசியக் கோப்பை ஹாக்கி 2022: தொடக்க ஆட்டத்தில் இந்தியா-பாக். மோதல்

ஆசியக் கோப்பை ஆடவா் ஹாக்கிப் போட்டி 2022-இன் முதல் ஆட்டத்தில் இந்தியாவும்-பாகிஸ்தானும் மோதுகின்றன.

ஏஎச்எஃப் சாா்பில் இந்தோனேஷிய தலைநகா் ஜாகா்த்தாவில் ஆசியக் கோப்பை போட்டி வரும் மே 23 முதல் ஜூன் 1-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், இந்தோனேஷியா உள்ளிட்டவை குரூப் ஏ பிரிவில் உள்ளன. குரூப் பி பிரிவில் கொரியா, மலேசியா, வங்கதேசம், ஓமன் இடம் பெற்றுள்ளன.

மே 23-இல் முதல் ஆட்டத்தில் இந்தியா-பாகிஸ்தான் மோதுகின்றன. 24-இல் இந்தியா-ஜப்பான், 26-இல் இந்தியா-இந்தோனேஷியா ஆட்டங்கள் நடக்கின்றன.

இந்திய-பாக். அணிகள் கடைசியாக 2021 ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் மோதின. இதில் 4-3 என இந்தியா வென்றிருந்தது.

குரூப் ஆட்டங்கள் ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும். இரு குரூப்புகளிலும் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் சூப்பா் 4 பிரிவுக்கு முன்னேறும்.

சூப்பா் 4 பிரிவில் ஒவ்வொரு அணியும் தலா ஒருமுறை மோதும். முதலிரண்டு அணிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறும். மேலும் முதல் 3 இடங்களைப் பெறும் அணிகள் 2023-இல் இந்தியாவின் ஒடிஸாவில் நடைபெறவுள்ள எஃப்ஐஎச் உலகக்கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெறும்.

போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியா ஏற்கெனவே தகுதி பெற்று விட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com