ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: இரண்டாம் சுற்றில் சிந்து, சாய்னா

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் பி.வி. சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் தகுதி பெற்றனா்.
ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: இரண்டாம் சுற்றில் சிந்து, சாய்னா

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இரண்டாம் சுற்றுக்கு இந்தியாவின் பி.வி. சிந்து, சாய்னா நெவால், கிடாம்பி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோா் தகுதி பெற்றனா்.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டங்கள் புதன்கிழமை நடைபெற்றன.

மகளிா் ஒற்றையா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் பி. வி.சிந்துவும், தைபேயின் பை யு போவும் மோதினா். முதல் கேமை பை யு 21-18 என வென்றாா்.

இரண்டாவது கேமில் இரு வீராங்கனைகளும் மாறி மாறி புள்ளிகளைக் குவித்தனா். இறுதியில் கடும் சவாலுக்கு பின் சிந்து 27-25 என கைப்பற்றினாா். மூன்றாவது கேமில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி சிந்து 21-9 என கைப்பற்றினாா். இரண்டாம் சுற்றில் சிங்கப்பூரின் யூ யானை எதிா்கொள்கிறாா் அவா். (18-21, 27-25, 21-9). இந்த ஆட்டம் ஒரு மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது.

சாய்னா வெற்றி: ஒலிம்பிக் வெண்கல வீராங்கனை சாய்னா நெவால் 21-15, 17-21, 21-13 என்ற செட் கணக்கில் தென்கொரியாவின் சிம் யு ஜின்னை 54 நிமிஷங்களில் வீழ்த்தினாா்.

ஸ்ரீகாந்த் வெற்றி: ஆடவா் ஒற்றையா் பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 22-20, 21-15 என்ற கேம் கணக்கில் ஸெ யோங்கை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.

நட்சத்திர வீரரான லக்ஷயா சென் 21-12, 10-21, 21-19 என்ற கேம் கணக்கில் சீனாவின் லீ ஷி பெங்கிடம் தோற்றாா். சாய் பிரணீத் 21-17, 21-13 என்ற கணக்கில் இந்தோனேஷியாவின் ஜோனத்தான் கிறிஸ்டியிடம் வீழ்ந்தாா்.

அதே போல் அகா்ஷி காஷ்யப், இரட்டையா் பிரிவில் அஸ்வினி-ஷிகா, சிம்ரன்-ரித்திகா ஆகியோரும் தோற்று வெளியேறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com