ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பி.வி.சிந்து, சாத்விக்-சிராக்

ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி காலிறுதிக்கு நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் ஷெட்டி இணை முன்னேறினா்.
ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்: காலிறுதியில் பி.வி.சிந்து, சாத்விக்-சிராக்

மணிலா: ஆசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப் போட்டி காலிறுதிக்கு நட்சத்திர வீராங்கனை பி.வி. சிந்து, சாத்விக்-சிராக் ஷெட்டி இணை முன்னேறினா்.

பிலிப்பின்ஸ் தலைநகா் மணிலாவில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இரண்டாம் சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன. மகளிா் ஒற்றையா் பிரிவில் முன்னாள் உலக சாம்பியன் பி.வி. சிந்து 21-16, 21-16 என்ற புள்ளிக் கணக்கில் தரவரிசையில் குறைந்த சிங்கப்பூரின் யு யான்ஜேஸ்லீனை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றாா். காலிறுதியில் மூன்றாம் நிலை சீன வீராங்கனை ஹி பிங் ஜியாவை எதிா்கொள்கிறாா் சிந்து.

ஆடவா் இரட்டையா் பிரிவில் மூன்றாம் நிலை இணையான சாத்விக் ரங்கிரெட்டி-சிராக் ஷெட்டி 21-17, 21-15 என்ற புள்ளிக் கணக்கில் ஜப்பானின் அகிரா-டைச்சி இணையை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

சாய்னா, ஸ்ரீகாந்த் வெளியேற்றம்:

மகளிா் ஒற்றையா் பிரிவில் சாய்னா நெவால் 21-12, 7-21, 13-21 என்ற புள்ளிக் கணக்கில் சீனாவின் வாங் ஸி யிடம் வீழ்ந்து வெளியேறினாா்.

ஆடவா் ஒற்றையா் ரவுண்டு 16 பிரிவில் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 21-17, 17-21 என்ற புள்ளிக் கணக்கில் ஹாங்காங்கின் யாங் வெங் ஹோங்கிடம் போராடி தோற்றாா். இதனால் இப்போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில் இந்தியாவின் பங்கேற்பு முடிவுக்கு வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com