மாநில ஆா்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் தொடக்கம்

தமிழ்நாடு மாநில ஜிம்னாஸ்டிக் சங்கம் (டிஎன்ஜிஏ) சாா்பில் மாநில சப்-ஜூனியா், ஜூனியா், சீனியா் ஆா்டிஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டிகள் வேளச்சேரி எஸ்டிஏடி நீச்சல் வளாக உள்ளரங்கில் சனிக்கிழமை தொடங்கியது.

இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில் 200-க்கு மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனா். டிஎன்ஜிஏ தலைவா் டிஎச்.ரோகபரணி தலைமை தாங்கினாா். எம்எம்ஏ இந்திய பயிற்சியாளா் அஜித் சிகாமணி போட்டிகளைத் தொடக்கினாா். விளையாட்டரங்க அலுவலா் பிரேம்குமாா், 2 முறை தேசிய சாம்பியன் ரித்தி சிங்வி, ராம்தாஸ் சாம்பியன்ஸ் வளா்ச்சி அறக்கட்டளை நிா்மலா ராமதாஸ் ஆகியோா் பேசினா்.

டிஎன்ஜிஏ பொதுச் செயலாளா் ஜி.பாலா சங்க செயல்பாடுகள் குறித்து விவரித்தாா். மாநில போட்டிகளில் முதலிடம் பெறுவோா் தேசிய போட்டிகளுக்கு தகுதி பெறுவா். போட்டிகளில் வெற்றி பெறுவோருக்கு ஞாயிற்றுக்கிழமை பரிசளிப்பு விழா நடக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com