4ஆம் சுற்று: இந்தியாவிற்கு தோல்வி, டிரா

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நான்காம் சுற்றில் இந்திய ஏ அணிகள் சற்றுத் தடுமாற்றமாக விளையாடி டிரா செய்தன. வழக்கம் போல் பி அணிகள் மட்டும் வெல்ல, சி அணிகள் தோல்வி கண்டன. 
4ஆம் சுற்று: இந்தியாவிற்கு தோல்வி, டிரா

மாமல்லபுரம் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நான்காம் சுற்றில் இந்திய ஏ அணிகள் சற்றுத் தடுமாற்றமாக விளையாடி டிரா செய்தன. வழக்கம் போல் பி அணிகள் மட்டும் வெல்ல, சி அணிகள் தோல்வி கண்டன. 

பதக்கம் வெல்லும் எனக் கருதப்படும் இந்தியாவின் 6 அணிகளும் முதல் 3 சுற்றுகளில் வெற்றிநடை போட்டன. இந்நிலையில் நான்காம் சுற்று ஆட்டங்கள் திங்கள்கிழமை நடைபெற்றன. 

ஓபன் பிரிவு: இதில் ஓபன் பிரிவில் இந்தியா ஏ - பிரான்ஸ் ஆட்டம் 2-2 என டிராவில் முடிந்தது. இதில் ஹரிகிருஷ்ணா- மெüசாட் ஜுல்ஸ், விதித் குஜராத்தி- பிரெஸ்ஸிநெட், அர்ஜுன் எரிகைசி -கார்னட் மேத்யூ,  நாராணன் - லகார்டே மேக்சிம் என அனைவரும் மோதிய ஆட்டங்கள் டிரா ஆகின. 

இந்தியா பி அணி 3-1 என இத்தாலியை வென்றது. குகேஷ் - வோகட்டுரோ டேனியலையும், நிஹால் ஸரீன் - மொரோனி லுகோவையும் வென்றனர். பிரக்ஞானந்தா - லொரென்சா ஆட்டம் டிராஆனது. மூன்றாவது சுற்றில் தடுமாறிய பிரக்ஞானந்தா, எதிராளிக்கு நேரமானதால் வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது. ரவுனக் சத்வானி- சோனிஸ் பிரான்செஸ்கோ ஆட்டமும் டிரா ஆனது.

இந்தியா சி அணி 1.5-2.5 என ஸ்பெயினிடம் தோற்றது. இதில் சூரியசேகர் கங்குலி-ஷிரோவ் அலெக்ஸ், சேதுராமன்- வலேஜோ ஆட்டங்கள் டிரா ஆகின. அபிஜித் குப்தா - ஆன்டன் டேவிட்டிடம் தோல்வி அடைந்தார்.  கார்த்திகேயன் முரளி - சான்டோஸ் லடாஸôவுடன் டிரா கண்டார். 

மகளிர் பிரிவு: மகளிர் பிரிவில் இந்தியா ஏ அணி, பலம் வாய்ந்த ஹங்கேரியை 3-1 என வென்றது. கொனேரு ஹம்பி - ஹோங் தன் டிராங்குடனும், டி.ஹரிகா -காரா டிசியாவுடனும் டிரா செய்தனர். வைஷாலி - லாஸரேன் வஜ்டா ஆட்டமும் டிரா ஆக, தான்யா சச்தேவ் மட்டும் 52-ஆவது நகர்த்தலில் கால்சோஸ்காவை வென்றார். 

இந்தியா பி அணி 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் எஸ்டோனியாவை வென்றது. வந்திகா அகர்வால் - நார்வா மாயை வீழ்த்த, பத்மினி ரெüட் - ஓல்டே மார்க்கரெட், செüம்யா சுவாமிநாதன் - சினிட்சினா, திவ்யா தேஷ்முக் - பிளோகின் சோபியா ஆட்டங்கள் டிரா ஆகின. 

இந்தியா சி அணி பலம் வாய்ந்த ஜார்ஜியாவிடம் 1-3 என தோற்றது. ஈஷா காரவேட் -ஸôக்னிட்úஸ நானாவிடம் தோல்வி காண, பி.வி.நந்திதா - பட்டாஷியாவில்லியை வீழ்த்தினார். பிரதியுஷா போடா - மெலியோ சலோமிடமும், சாஹிதி வர்ஷினி - ஜாக்ஷிவிலிவிடமும் தோல்வியடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com