பாகிஸ்தானில் 7 டி20 ஆட்டங்களில் விளையாடும் இங்கிலாந்து அணி!

17 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்யவுள்ளது.
பாகிஸ்தானில் 7 டி20 ஆட்டங்களில் விளையாடும் இங்கிலாந்து அணி!

17 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செய்யவுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

2005-க்குப் பிறகு இங்கிலாந்து அணி பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் செய்ததில்லை. பாகிஸ்தானுக்குப் பதிலாக 2012, 2016-ல் ஐக்கிய அரபு அமீரகத்தில் இரு தொடர்களை இங்கிலாந்து அணி விளையாடியது. கடந்த வருடம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாகிஸ்தானில் இங்கிலாந்து அணி விளையாடவிருந்த தொடரை  ரத்து செய்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

இந்நிலையில் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு பாகிஸ்தானில் 7 டி20 ஆட்டங்களை விளையாடவுள்ளது இங்கிலாந்து அணி. இதற்கான அறிவிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இன்று வெளியிட்டுள்ளது. டி20 தொடர் செப்டம்பர் 20-ல் தொடங்கி அக்டோபர் 2-ல் முடிவடைகிறது. முதல் நான்கு ஆட்டங்கள் கராச்சியிலும் கடைசி மூன்று ஆட்டங்கள் லாகூரிலும் நடைபெறவுள்ளன. இந்தத் தொடரை முடித்துவிட்டு டி20 உலகக் கோப்பையில் விளையாட ஆஸ்திரேலியாவுக்குச் செல்கிறது இங்கிலாந்து அணி. டிசம்பரில் பாகிஸ்தானில் 3 டெஸ்டுகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் இங்கிலாந்து விளையாடவுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com