மே.இ.தீவுகள் தொடரிலிருந்து காயம் காரணமாக விலகும் பிரபல இந்திய பந்து வீச்சாளர்
By DIN | Published On : 06th August 2022 09:57 PM | Last Updated : 06th August 2022 09:57 PM | அ+அ அ- |

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 தொடரிலிந்து காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷல் படேல் விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை மூன்று போட்டிகள் முடிவடைந்துள்ளன. இன்று 4வது டி20 போட்டி நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வருகிறது.
இதையும் படிக்க: குடியரசு துணைத் தலைவராக ஜகதீப் தன்கர் தேர்வு
இந்நிலையில், இந்திய அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஹர்ஷல் படேல் காயம் காரணமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரிலிருந்து விலகுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. விழா எலும்பில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகாத காரணத்தால் அவர் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளில் இருந்தும் விலகியுள்ளார்.
ஹர்ஷல் படேல் காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.