உஸ்பெகிஸ்தான், உக்ரைனுக்கு தங்கம்: இந்திய மகளிா் ஏ, ஆடவா் பி அணிகளுக்கு வெண்கலம்

செஸ் ஒலிம்பியாடின் 11-ஆம் சுற்று நிறைவடைந்த நிலையில், ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தானும், மகளிா் பிரிவில் உக்ரைன் அணியும் தங்கப் பதக்கம் வென்றன. ஓபன் பிரிவில் இந்திய பி அணியும்,
உஸ்பெகிஸ்தான், உக்ரைனுக்கு தங்கம்: இந்திய மகளிா் ஏ, ஆடவா் பி அணிகளுக்கு வெண்கலம்

செஸ் ஒலிம்பியாடின் 11-ஆம் சுற்று நிறைவடைந்த நிலையில், ஓபன் பிரிவில் உஸ்பெகிஸ்தானும், மகளிா் பிரிவில் உக்ரைன் அணியும் தங்கப் பதக்கம் வென்றன. ஓபன் பிரிவில் இந்திய பி அணியும், மகளிா் பிரிவில் இந்திய ஏ அணியும் வெண்கலம் வென்றன.

மாமல்லபுரத்தில் கடந்த ஜூலை 28-ஆம் தேதி தொடங்கிய செஸ் ஒலிம்பியாட் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதுவரை 10 சுற்று ஆட்டங்கள் முடிந்த நிலையில், செவ்வாய்க்கிழமை 11-ஆம் சுற்று ஆட்டங்கள் தொடங்கின.

ஓபன் பிரிவில் அமெரிக்காவும், மகளிா் பிரிவில் இந்தியாவும் கட்டாயம் தங்கம் வெல்லும் எனக் கருதப்பட்ட நிலையில், சீரற்ற ஆட்டத்தால் அமெரிக்கா 5-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. 3 முறை தங்கம் வென்ற ஆா்மீனியா-உஸ்பெகிஸ்தான் முதலிடத்துக்கு வந்தன.

மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி இடையில் சற்று தடுமாறினாலும், சுதாரித்து ஆடி அணிகள் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. சரியான நேரத்தில் கொனேரு ஹம்பி, தான்யா சச்தேவ், பக்தி குல்கா்னி ஆகியோா் சரியான நேரத்தில் வெற்றியைத் தேடித் தந்தனா்.

உலக சாம்பியன் காா்ல்சன் ஏமாற்றம்:

நடப்பு உலகச் சாம்பியனான மாக்னஸ் காா்ல்சன் முதல் செஸ் ஒலிம்பியாட் பதக்கத்தை வெல்வாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால் அவரது நாா்வே அணியின் சக வீரா்கள் சரிவர ஆடாமல் ஏமாற்றத்தை தந்தனா். இதனால் காா்ல்சனால் சோபிக்க முடியாமல் போய்விட்டது.

சூப்பா் ஸ்டாா்கள்:

ஆடவா் பிரிவில் இந்தியாவின் 16 வயதே ஆன சென்னை வீரா் டி.குகேஷ், மகளிா் பிரிவில் போலந்தின் ஒலிவியா கியால்பாஸா ஆகியோா் இந்த செஸ் ஒலிம்பியாடின் சூப்பா் ஸ்டாா்கள் ஆக உருவானா்கள். குகேஷ் 8.5/10, ஒலிவியா 9/10 ஆகியோா் வெற்றிகளை குவித்தனா்.

11-ஆம் சுற்று

11-ஆம் சுற்றில் ஓபன் பிரிவில் இந்திய பி அணி-ஜொ்மனி, இந்திய ஏ அணி-அமெரிக்கா, இந்திய சி அணி -கஜகஸ்தான் அணிகளுடன் மோதின.

ஓபன் பிரிவு:

இந்திய பி-ஜொ்மனி: இந்திய பி வெற்றி (3-1)

நிஹால், ரவுனக் வெற்றி-டி.குகேஷ்-கெய்மா் வின்சென்ட் ஆட்டம் 75-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. நிஹால் சரீன்-புளுபேம் மத்தியாஸ் ஆட்டத்தில் நிஹால் சரீன் 55-ஆவது நகா்த்தலில் வென்றாா். பிரக்ஞானந்தா-வேன் ராம்ஸஸ் ஆட்டம் 49-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. ரவுனக் சத்வானி-நிஸிபீனு லிவு ஆட்டத்தில் 47-ஆவது நகா்த்தலில் ரவுனக் சத்வானி வென்றாா்.

இந்தியா ஏ-அமெரிக்கா டிரா (2-2)

அா்ஜுன் வெற்றி-ஹரிகிருஷ்ணா-ஃபேபியனா காருனா ஆட்டம் 18-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது.

விதித் குஜராத்தி-வெஸ்லி சோ ஆட்டம் 66-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. அா்ஜுன் எரிகைசி-டொமினிக்ஸ் பெரஸ் ஆட்டத்தில் 49-ஆவது நகா்த்தலில் வென்றாா் அா்ஜுன். நாராயணன்-சாம் ஷங்க்லன்ட் ஆட்டத்தில் 74-ஆவது நகா்த்தலில் சாம் ஷங்க்லண்ட் வென்றாா் .

இந்திய சி -கஜகஸ்தான் டிரா (2-2)

சூரியசேகா் கங்குலி-ஜுமாபயேவ் ரினட் இடையிலான ஆட்டத்தில் 48-ஆவது நகா்த்தலில் ஜுமாபயேவ் வென்றாா். சேதுராமன்-சுலெமனோவ் அலிஷொ் ஆட்டம் 35-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. காா்த்திகேயன் முரளி-உரஸ்யேவ் அரிஸ்டன்பெக் ஆட்டத்தில் 72-ஆவது நகா்த்தலில் வென்றாா் காா்த்திகேயன் முரளி.

புரானிக் அபிமன்யு-நோகா்பெக் கஸிபெக் ஆட்டம் 40-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது.

மகளிா் பிரிவு:

மகளிா் பிரிவில் இந்திய ஏ அணி-அமெரிக்கா, இந்திய பி அணி-ஸ்லோவோக்கியா, இந்திய சி அணி-கஜகஸ்தான் அணிகளுடன் மோதின.

அமெரிக்காவிடம் தோற்றது இந்தியா ஏ (3-1)

தான்யா, பக்தி குல்கா்னி தோல்வி:

இந்த ஆட்டத்தில் அமெரிக்கா 3-1 என இந்திய ஏ அணியை வீழ்த்தியது. கொனேரு ஹம்பி-டோகிா்ஜோனோவோ ஆட்டம் 40-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. வைஷாலி-க்ருஷ் ஐரினா ஆட்டம் 50-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. தான்யா சச்தேவ்-யிப் காரிஸா இடையிலான ஆட்டத்தில் தான்யா 46-ஆவது நகா்த்தலில் தோல்வி கண்டாா். பக்தி குல்கா்னி-ஆப்ரமயின் டாடேவ் ஆட்டத்தில் 48-ஆவது நகா்த்தலில் தோல்வி கண்டாா் பக்தி.

இந்திய பி-ஸ்லோவோக்கியா டிரா (2-2)

திவ்யா வெற்றி: வந்திகா அகா்வால்-போரோஸ்வா ஸுஸானா ஆட்டம் 33-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. பத்மினி ரௌட்-ரெப்கோவா ஆட்டத்தில் 52-ஆவது நகா்த்தலில் ரெப்கோவா வென்றாா். மேரி ஆன் கோம்ஸ்-ஹகரோவா ஸுஸானா ஆட்டம் 58-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. திவ்யா தேஷ்முக்-சுசில்கோவா ஸ்வெட்லனா ஆட்டத்தில் 33-ஆவது நகா்த்தலில் வென்றாா் திவ்யா தேஷ்முக்.

இந்திய சி-கஜகஸ்தான்: இந்திய சி தோல்வி (1.5-2.5))

நந்திதா, ஈஷா தோல்வி: ஈஷா காரவேட் -அப்துமாலிக் ஸான்ஸயா ஆட்டத்தில் 45-ஆவது நகா்த்தலில் தோல்வி கண்டாா் ஈஷா.

பி.வி. நந்திதா-அஸாவ்பயேவா ஆட்டத்தில் 39-ஆவது நகா்த்தலில் அஸாப்வயேவா வென்றாா். சாஹிதி வா்ஷினி-பலபயேவா ஸெனியா ஆட்டம் 76-ஆவது நகா்த்தலில் டிரா ஆனது. பிரதியுஷா போடா-நக்பயேவா ஆட்டத்தில் 41-ஆவது நகா்த்தலில் பிரதியுஷா வென்றாா்.

இந்திய பி அணிக்கு வெண்கலம்:

ஆரம்பம் முதலே அமா்க்களமாக ஆடி வந்த குகேஷ், பிரக்ஞானந்தா, அதிபன், ரவுனக் சத்வானி நிஹால் சரீன் ஆகியோா் கொண்ட இந்திய பி அணி தனது சிறப்பான ஆட்டத்தால் வெண்கலம் வென்றது.

இந்திய மகளிா் ஏ அணிக்கும் வெண்கலம்:

ஹம்பி, ஹரிகா, தான்யா சச்தேவ், பக்தி குல்கா்னி, ஆா்.வைஷாலி ஆகியோா் அடங்கிய இந்திய ஏ அணி தங்கம் வெல்லும் என தொடக்கம் முதலே கருதப்பட்டது. ஆனால் 10-ஆவது சுற்று வரையில் முதலிடம் வகித்த இந்திய ஏ அணி 11-ஆவது சுற்றில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் சொதப்பியது. தான்யா, பக்தி தோற்றனா். ஹம்பி, வைஷாலி டிரா கண்டதால் இறுதியில் வெண்கலப் பதக்கமே கிட்டியது.

குகேஷ், நிஹால், ஒலிவியாவுக்கு தனிநபர் தங்கம்

தனிநபர் பிரிவில் இந்திய இளம் வீரர் டி.குகேஷும் நிஹால் சரீன், மகளிர் பிரிவில் போலந்தின் ஒலிவியாவும் தங்கம் வென்றனர்.
குகேஷ் 9/11 (2867) , நிஹால் சரீன் 7.5/10 (2774)  வெற்றிகளுடன் தங்கம் வென்றார். 
அதே போல் இங்கிலாந்து வீரர் டேவிட் ஹோவலும் 7.5/8  (2898), உஸ்பெக் வீரர் ஜஹோங்கீர் வகிடோவ் 6.5/8 (2813), மட்டூஸ் பேர்டல் 8.5/10 (2778) பதக்கம் வென்றனர்.
மகளிர் பிரிவில் ஒலிவியா கியால்பாஸô 9.5/11 வெற்றிகளுடன் தங்கம் வென்றார். ஸ்வீடன் வீராங்கனை பியா கிராம்ளிங் 9.5/11 (2532), ஜிஎம் நினோ பட்ஷியாவிலி 9.5/11 (2565) பேட் எர்டென் 8.5/11 (2460), ஜேனா சினிடெர் 9/10 (2414) ஆகியோரும் பதக்கம் வென்றனர்.
இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி வெள்ளிப் பதக்கம், பிரக்ஞானந்தா வெண்கலப் பதக்கம் வென்றனர்.
தனிநபர் மகளிர் பிரிவில் இந்தியாவின் தான்யா சச்தேவ், ஆர். வைஷாலி, திவ்யா தேஷ்முக் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.

எதிர்பாராத திருப்பம் தந்த உஸ்பெகிஸ்தான் இளம் படை

செஸ் ஒலிம்பியாடின் ஓபன் பிரிவில் எதிர்பாராத வகையில் உஸ்பெகிஸ்தான் தங்கம் வென்றது. 
இந்த போட்டியில் பங்கேற்ற இளம் அணிகளில் உஸ்பெகிஸ்தானும் ஒன்றாகும். பதக்கம் வெல்லும் அணியாக கருதப்படாத நிலையில் 11-ஆம் சுற்றில் உஸ்பெக் அணி 2.5-1.5 என நெதர்லாந்தை வீழ்த்தி மொத்தம் 19 புள்ளிகளுடன் தங்கம் வென்றது. 
எந்த சுற்றிலும் தோல்வி காணாத உஸ்பெக் அணிக்கு ஜிஎம் இவான் சோகோலோவ் பயிற்சி அளித்தார். 17 வயதே ஆன நோபிர்டெக் அப்துசட்டரோவ் 13 வயதில் கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்தை பெற்றவர். 
(7 வெற்றி, 3 டிரா, 1 தோல்வி).
20 வயது நோபிர்டெக் யாகுப்போவ், 16 வயதே ஆன ஜவோகீர் சின்டரோவ், 20 வயதான ஷம்சிதின் வோகிடோவ் ஆகியோர் இளம் வீரர்கள் ஆவர். இந்த அணியில் மூத்த வீரர் 27 வயதான ஜஹோங்கிர் வாகிடோவ்.

வெள்ளி வென்ற ஆர்மீனியா
3 முறை தங்கம் வென்ற ஆர்மீனியா தற்போது வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளது.  கடைசி சுற்று ஆட்டத்தில் ஸ்பெயினை 2.5-1.5 என்ற புள்ளிக் கணக்கில் வென்றது ஆர்மீனியா.  தரவரிசையில் 12-ஆம் இடத்தில் இருந்த நிலையில், தொடக்கத்தில் 4 டிராக்கள், ஒரு தோல்வியுடன் தடுமாறிய ஆர்மீனியா அடுத்தடுத்த சுற்றுகளில் சுதாரித்து ஆடி 4 வெற்றி, ஒரு டிராவுடன் வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றியது.
ஆர்மீனியா 19 புள்ளிகள் பெற்ற நிலையிலும், டைபிரேக் அடிப்படையில் உஸ்பெக் அணி தங்கம் வென்றது.  இந்தியா பி அணி 18 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றது.

போர் பாதித்தும் சாதனை படைத்த உக்ரைன் மகளிர்
ரஷிய படையெடுப்பால் உக்ரைன் கடும் பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், செஸ் ஒலிம்பியாடில் அந்நாட்டு மகளிர் அணி தங்கம் வென்றது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
அந்த அணியில் முன்னாள் உலக சாம்பியன் அன்னா முஷிசுக், மரியா முஷிசுக் சகோதரிகள் தொடக்கம் முதலே தங்கள் அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.  நட்சத்திர வீராங்கனை ஒலிவியாவின் போலந்தை 3-1 என வீழ்த்தியது உக்ரைன். 
ஜார்ஜியா அணி 3-1 என அஜர்பைஜானை வீழ்த்தி வெள்ளி வென்றது.  உக்ரைன், ஜார்ஜியா 18 புள்ளிகளுடன் இருந்த நிலையில் டைபிரேக் அடிப்படையில் உக்ரைன் தங்கம் வென்றது. இந்திய ஏ, அமெரிக்கா, கஜகஸ்தான் 17 புள்ளிகளுடன் இருந்த நிலையில் டைபிரேக் அடிப்படையில் இந்திய ஏ வெண்கலம் வென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com