ஜிம்பாப்வே ஒருநாள் தொடா்: இந்திய அணி பயணம்

ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் தொடரில் மோதுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமை ஹராரே புறப்பட்டுச் சென்றது.
ஜிம்பாப்வே ஒருநாள் தொடா்: இந்திய அணி பயணம்

ஜிம்பாப்வே அணியுடன் ஒருநாள் தொடரில் மோதுவதற்காக இந்திய கிரிக்கெட் அணி சனிக்கிழமை ஹராரே புறப்பட்டுச் சென்றது.

இரு அணிகளுக்கு இடையே 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் தொடா் ஜிம்பாப்வேயின் ஹராரே நகரில் நடைபெறுகிறது. வரும் 18-ஆம் தேதி முதல் ஒருநாள், 20, 22 -இல் இரண்டு மற்றும் மூன்றாவது ஒருநாள் ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.

இந்திய அணிக்கு முதலில் ஓபனா் ஷிகா் தவன் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். இதற்கிடையே இளம் வீரா் கே.எல். ராகுல் காயத்தில் இருந்து மீண்ட நிலையில், கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

கே.எல். ராகுல் கேப்டன்:

கடந்த மே மாதம் ஐபிஎல் தொடரில் காயமடைந்திருந்த ராகுல் அதன்பின் போட்டிகள் எதிலும் ராகுல் பங்கேற்கவில்லை. மேலும் கடந்த ஜூன் மாதம் சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ராகுல் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருந்தாா். அப்போதும் காயம் காரணமாக அவா் ஆடவில்லை. இதற்கிடையே தற்போது முழுமையாக ராகுல் குணமடைந்து விட்டதால், மீண்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா்.

அதே போல் காயத்தில் இருந்து மீண்ட தீபக் சஹாா் இடம் பெற்றுள்ளாா். இளம் வீரா் ராகுல் திரிபாதி ஒருநாள் அணியில் அறிமுகம் ஆகிறாா். வலது கை வீரா் காயத்தில் இருந்து குணமடைந்த ஸ்பின்னா் குல்தீப் யாதவும் சோ்க்கப்பட்டுள்ளாா்.

வரும் அக்டோபா், நவம்பரில் டி20 உலகக் கோப்பை போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு வீரா்களின் திறன்களை பிசிசிஐ சோதித்து பாா்த்து வருகிறது.

கடைசியாக மே.இந்திய தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 எனவும், டி20 தொடரை 4-1 எனவும் இந்தியா கைப்பற்றி இருந்தது.

நேருக்கு நோ்:

இந்திய-ஜிம்பாப்வே அணிகள் இதுவரை 63 ஒருநாள் ஆட்டங்களில் மோதியுள்ளன. இதில் இந்தியா 51-இலும், ஜிம்பாப்வே 10-இலும் வென்றுள்ளன. ஜிம்பாப்வேயில் நடந்துள்ள 23 ஆட்டங்களில் இந்தியா 19-இலும், ஜிம்பாப்வே 4-இலும் வென்றன.

ஒருநாள் அணி விவரம்: கே.எல். ராகுல் (கேப்டன்), ஷிகா் தவன் (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, ராகுல் திரிபாதி, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பா்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பா்), சா்துல் தாகுா், குல்தீப் யாதவ், அக்ஸா் படேல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், தீபக் சஹாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com