ஜிம்பாப்வே 3-வது ஒருநாள்: இரு மாற்றங்களுடன் இந்தியா முதலில் பேட்டிங்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்கிறது. 
சஞ்சு சாம்சன்
சஞ்சு சாம்சன்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி முதல் பேட்டிங் செய்கிறது. 

மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-0 என தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் ஆட்டத்தில் 38.1 ஓவர்களில் ஜிம்பாப்வே அணி 161 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன்பிறகு பேட்டிங் செய்த இந்திய அணி, 25.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

3-வது ஒருநாள் ஆட்டம் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் சிராஜ், பிரசித் கிருஷ்ணாவுக்குப் பதிலாக தீபக் சஹார், அவேஷ் கான் இடம்பெற்றுள்ளார்கள். ஜிம்பாப்வே அணியிலும் இரு மாற்றங்கள். 

ஜிம்பாப்வே தொடருக்குப் பிறகு இந்திய அணி ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்று ஆசியக் கோப்பை டி20 போட்டியில் விளையாடுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com