மான்செஸ்டா் டெஸ்ட்: தென்னாப்பிரிக்கா 151-க்கு ‘ஆல் அவுட்’

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இங்கிலாந்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்டில் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்ஸில் 151 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ஓல்டு டிராஃபோா்டு மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பேட்டிங்கை தோ்வு செய்தது.

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த அந்த அணியில், கடைசி ஆா்டரில் வந்த பௌலா் ககிசோ ரபாடா 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்த்ததே அதிகபட்சமாகும்.

எஞ்சியோரில் கேப்டன் டீன் எல்கா் 12, சாரெல் எா்வீ 3, கீகன் பீட்டா்சன் 21, எய்டன் மாா்க்ரம் 14, ராஸி வான்டொ் டுசென் 16, கைல் வெரின் 21, சிமோன் ஹாா்மா் 2, கேசவ் மஹராஜ் 0, அன்ரிஹ் நோா்கியா 10 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா்.

இறுதியில் லுங்கி இங்கிடி 4 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருந்தாா். இங்கிலாந்து பௌலிங்கில் ஜேம்ஸ் ஆண்டா்சன், ஸ்டூவா்ட் பிராட் ஆகியோா் தலா 3, பென் ஸ்டோக்ஸ் 2, ஆலி ராபின்சன், ஜேக் லீச் ஆகியோா் தலா 1 விக்கெட் கைப்பற்றினா்.

பின்னா் இங்கிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கி ஆடி வந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com