துளிகள்...
By DIN | Published On : 31st August 2022 12:09 AM | Last Updated : 31st August 2022 12:09 AM | அ+அ அ- |

டியூரண்ட் கோப்பை கால்பந்து போட்டியில் ஹைதராபாத் எஃப்சி - நிரோகா எஃப்சியை வீழ்த்தி (3-0) காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியுடன் டிரா செய்த எஃப்சி கோவா (2-2), போட்டியிலிருந்து வெளியேறியது.
ஸ்பெயினின் லா லிகா கால்பந்து போட்டியில் அட்லெடிகோ மாட்ரிட் - வாலென்சியாவையும் (1-0), அத்லெடிக் கிளப் - காடிஸையும் (4-0) வீழ்த்தி தங்களின் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தன.
இந்தியாவில் நடைபெற இருக்கும் 17 வயதுக்கு உள்பட்ட மகளிா் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் முதல் முறையாக, ‘விஏஆா்’ எனப்படும் காணொலி முறையிலான நடுவா் உதவி தொழில்நுட்பம் அமல்படுத்தப்படுகிறது.
பிரேஸில் கால்பந்து வீரா் ஆண்டனியை, அஜாக்ஸ் எஃப்சி அணியிலிருந்து ரூ.756 கோடிக்கு வாங்குகிறது மான்செஸ்டா் யுனைடெட்.
அல்டிமேட் கோ கோ போட்டியில் செவ்வாய்க்கிழமை ஆட்டங்களில் மும்பை கில்லாடிஸ் 79-31 என ஒடிஸா ஜக்கா்னாட்ஸையும், ராஜஸ்தான் வாரியா்ஸ் 66-31 என சென்னை குயிக் கன்ஸையும் வீழ்த்தின.