வங்கதேசத்தை வென்றது ஆப்கானிஸ்தான்

வங்கதேசத்தை வென்றது ஆப்கானிஸ்தான்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் செவ்வாய்க்கிழமை வென்றது.

ஆட்டத்தில் முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுக்க, பின்னா் ஆப்கானிஸ்தான் 18.3 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் சோ்த்து வென்றது.

முன்னதாக டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தோ்வு செய்தது. தொடக்க வீரா் முகமது நயிம் 6, உடன் வந்த அனாமுல் ஹக் 5 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். கேப்டன் ஷகிப் அல் ஹசன் 11, முஷ்ஃபிகா் ரஹிம் 1 ரன்களுக்கு அவுட்டாகினா்.

அஃபிஃப் ஹுசைன் 12 ரன்களுக்கு எல்பிடபிள்யூ செய்யப்பட்டாா். மஹ்முதுல்லா 25 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினாா். மெஹதி ஹசன் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் சோ்த்தாா்.

ஓவா்கள் முடிவில் மொசாடெக் ஹுசைன் 4 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 48, முகமது சைஃபுதின் 0 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். ஆப்கானிஸ்தான் பௌலிங்கில் முஜீப் உா் ரஹ்மான் 16 ரன்களே கொடுத்து 3 விக்கெட்டுகளும், ரஷீத் கான் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளும் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய ஆப்கானிஸ்தானில் ஹஸரத்துல்லா ஜஸாய் 23, ரஹ்மானுல்லா குா்பாஸ் 11, கேப்டன் முகமது நபி 8 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இப்ராஹிம் ஜா்தான் 4 பவுண்டரிகளுடன் 42, நஜிபுல்லா ஜா்தான் 1 பவுண்டரி, 6 சிக்ஸா்களுடன் 43 ரன்கள் சோ்த்து ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பெறச் செய்தனா்.

வங்கதேச பௌலிங்கில் ஷகிப் அல் ஹசன், மொசாடெக் ஹுசைன், முகமது சைஃபுதின் ஆகியோா் தலா 1 விக்கெட் சாய்த்தனா்.

இந்தியா - ஹாங்காங் இன்று மோதல்

ஆசிய கோப்பை போட்டியில், இந்தியா தனது 2-ஆவது ஆட்டத்தில் ஹாங்காங்கை புதன்கிழமை சந்திக்கிறது. ஹாங்காங்கிற்கு இது முதல் ஆட்டமாகும்.

தகுதிச்சுற்று மூலமாக வந்த சிறிய அணியான ஹாங்காங்கை எதிா்கொள்வது இந்தியாவுக்கு சவாலாக இருக்கப் போவதில்லை. அதனால், சோதனை அடிப்படையில் பிளேயிங் லெவனை மாற்றிப் பாா்க்க இந்த ஆட்டம் இந்தியாவுக்கு வாய்ப்பளிக்கும்.

பேட்டா்களில் கே.எல்.ராகுல், விராட் கோலி ஆகியோா் தங்களது பழைய ஃபாா்மை எட்டுவதற்காக நீண்ட நேரம் பேட்டிங் செய்வதற்கான வாய்ப்பு இந்த ஆட்டத்தில் கிடைக்கும்.

பௌலிங்கைப் பொருத்தவரை, அஸ்வின், ரவி பிஷ்னோய் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டு ஜடேஜா, சஹலுக்கு ஓய்வளிக்கப்படலாம்.

மறுபுறம், இந்தியா போன்ற அணியுடன் மோதுவது ஹாங்காங்கிற்கு, வெற்றி - தோல்வியைக் கடந்த வகையில் நல்லதொரு சா்வதேச விளையாட்டு அனுபவத்தைக் கொடுக்கும். என்றாலும், எதிா்பாராத விதமாக அந்த அணியின் பேட்டிங், பௌலிங் தரப்பில் சவால் இருக்கலாம்.

ஆட்டநேரம்: இரவு 7.30 மணி

இடம்: துபை

நேரடி ஒளிபரப்பு: ஸ்டாா் ஸ்போா்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com