ஜப்பான், ஸ்பெயின்: நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றது!
By DIN | Published On : 02nd December 2022 02:53 AM | Last Updated : 02nd December 2022 02:53 AM | அ+அ அ- |

உலகக் கோப்பையின் போது ஸ்பெயினுக்கு எதிராக இரண்டாவது கோலை அடித்த ஜப்பானின் கவுரு மிட்டோமா பந்தை சக வீரர் அவோ தனகாவிடம் அனுப்பினார்.
கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் குரூப் இ பிரிவில் ஜெர்மனி- கோஸ்டா ரிகா அணிகளும், ஜப்பான்-ஸ்பெயின் அணிகளும் மோதின.
ஜெர்மனி அணி 4-2 என்ற கோல் கணக்கில் கோஸ்டா ரிக்காவை வீழ்த்தியது. இருந்தும் நாக் அவுட் சுற்றுக்கு தகுதிபெறவில்லை.
ஜப்பான் அணி ஸ்பெயினை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது. ஜப்பான் வெற்றியினால் ஜெர்மனியின் நாக் அவுட் சுற்று வாய்ப்பு பறிபோனது.
பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஆர்ஜென்டீனா, போலந்து, மொராக்கோ, குரோசியா, ஜப்பான், ஸ்பெயின் என இதுவரை 14 அணிகள் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதியடைந்துள்ளன.