ஐபிஎல் ஏலம்: எந்த மாநில வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளார்கள்?

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. 
ஐபிஎல் ஏலம்: எந்த மாநில வீரர்கள் அதிக எண்ணிக்கையில் இடம்பெற்றுள்ளார்கள்?

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் மற்ற இந்திய மாநிலங்களை விடவும் ஜம்மு - காஷ்மீர் மாநில வீரர்கள் அதிக எண்னிக்கையில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்களின் ஏலம் டிசம்பர் 23 அன்று கொச்சியில் நடைபெறவுள்ளது. 

கடந்த மாதம் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டன. 

இந்நிலையில் ஐபிஎல் 2023 போட்டிக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் வீரர்களின் பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப தற்போது 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்படுவார்கள்.  

ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இம்முறை ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்கிறார்கள்.

இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்டுள்ள பட்டியலில் இந்திய மாநிலங்களில் ஜம்மு - காஷ்மீர் அணி வீரர்கள் அதிக எண்ணிக்கையில் ஏலத்தில் இடம்பெற்றுள்ளார்கள். ஐபிஎல் 2023 ஏலத்தில் 21 ஜம்மு - காஷ்மீர் வீரர்களும் தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், தில்லி மாநிலங்கள் சார்பாக தலா 16 வீரர்களும் ஏலத்தில் இடம்பெற்றுள்ளார்கள்.

ஐபிஎல் 2023 ஏலப் பட்டியல்: மாநில கிரிக்கெட் சங்கங்கள் வாரியாக...

21 - ஜம்மு - காஷ்மீர் 
16 - தமிழ்நாடு, கர்நாடகம், உத்தரப் பிரதேசம், தில்லி
15 - பஞ்சாப் 
13 - ராஜஸ்தான் 
12 - ஹரியானா, மும்பை 
11 - பெங்கால் 
10 - கேரளம், ஆந்திரா, பரோடா, ஜார்க்கண்ட் 
9 - இமாச்சல பிரதேசம், சட்டீஸ்கர் 
8 - விதர்பா 
7 - செளராஷ்டிரம், குஜராத், ஹைதராபாத் 
5 - உத்தரகண்ட் 
4 - பீஹார், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரம், சர்வீசஸ் 
3 - ரயில்வே, சண்டிகர், கோவா 
2 - ஒடிஷா, திரிபுரா 
1 - நாகலாந்து, அருணாசலப் பிரதேசம், புதுச்சேரி, அஸ்ஸாம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com