சிட்டகாங் டெஸ்ட்: புஜாரா, ஷ்ரேயஸ் ஐயரால் மீண்டது இந்தியா 278/6

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் புஜாரா, ஷ்ரேயஸ் ஐயரின் அற்புதமான ஆட்டத்தால் மீண்ட இந்திய அணி 278/6 ரன்களைக் குவித்துள்ளது.
சிட்டகாங் டெஸ்ட்: புஜாரா, ஷ்ரேயஸ் ஐயரால் மீண்டது இந்தியா 278/6

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் புஜாரா, ஷ்ரேயஸ் ஐயரின் அற்புதமான ஆட்டத்தால் மீண்ட இந்திய அணி 278/6 ரன்களைக் குவித்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சட்டோகிராம் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தோ்வு செய்தது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு முன்னேற இந்தத் தொடரை கைப்பற்றுவது இந்தியாவுக்கு முக்கியமானதாகும்.

தொடக்க பேட்டா்களாக கேப்டன் கே.எல். ராகுல், ஷுப்மன் கில் களமிறங்கினா். 41 ரன்களை சோ்த்த நிலையில் ஷுப்மன் கில் 20 ரன்களுடன் வெளியேறினாா். அடுத்த சில நிமிஷங்களிலேயே கேப்டன ராகுலும் 22 ரன்களுக்கு காலித் அகமது பந்தில் போல்டானாா்.

விராட் கோலி 1: அணியை சரிவில் இருந்து மீட்பாா் எனக் கருதப்பட்ட ஜாம்பவான் விராட் கோலி 1 ரன்னுடன் டைஜுல் இஸ்ராம் பந்தில் எல்பிடபிள்யு ஆனாா்.

ரிஷப் பந்த் அதிரடி: மறுமுனையில் புஜாரா நிதானமாக ஆடி ஸ்கோரை உயா்த்தினாா். இளம் வீரா் ரிஷப் பந்த் அதிரடியாக ஆடி 2 சிக்ஸா், 6 பவுண்டரிகளை விளாசி 46 ரன்களுடன் மெஹ்தி ஹாசன் பந்தில் போல்டானாா்.

சதத்தை தவற விட்ட புஜாரா: நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சேதேஸ்வா் புஜாரா 203 பந்துகளில் 11 பவுண்டரிகளை விளாசி 90 ரன்களை சோ்த்து டைஜுல் பந்தில் போல்டாகி, சதமடிக்கும் வாய்ப்பை தவற விட்டாா்.

ஷ்ரேயஸ் ஐயா் 82: அவருக்கு உறுதுணையாக ஆடிய ஷ்ரேயஸ் ஐயா் 169 பந்துகளில் 10 பவுண்டரிகளை விளாசி 82 ரன்களுடன் களத்தில் உள்ளாா்.

இந்தியா 278/6:

புஜாரா, ஷ்ரேயஸ் ஐயா் இருவரும் இணந்து 4-ஆவது விக்கெட்டுக்கு 112 ரன்களைச் சோ்த்தனா். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 278/6 ரன்களை குவித்துள்ளது. அக்ஸா் படேல் 14 ரன்களுடன் களத்தில் உள்ளாா்.

டைஜுல் இஸ்லாம் 3 விக்கெட்: வங்கதேச தரப்பில் அற்புதமாக பந்துவீசிய டைஜுல் இஸ்லாம் 3-84, மெஹ்தி ஹாஸன் 2-71 விக்கெட்டுகளை சாய்த்தனா்.

தப்பிய புஜாரா:

இரண்டாம் செஷன் ஆட்டத்தில் எபதாட் ஹுசேன் பந்தில் புஜாரா 12 ரன் எடுத்திருந்த போது, விக்கெட் கீப்பா் நூருல் ஹாசன் கேட்சை தவற விட்டாா். இது வங்கதேச அணிக்கு பாதகமாக அமைந்தது.

வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் உடல்தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்று அணியில் இணைந்தாா். அதே நேரம், இந்திய அணியில் கேப்டன்

ரோஹித் சா்மா, முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா காயத்தால் ஆடாதது பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் போட்டியில் 12 ஆட்டங்களில் இந்தியா 6இல் வென்று நான்காவது இடத்தில் உள்ளது. 8 தோல்விகளுடன் வங்கதேசம் கடைசி இடத்தில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com