ஐபிஎல் வரலாற்றில் அதிக கோடிகளுக்கு வாங்கப்பட்ட முதல் 5 வீரர்கள்

ஐபிஎல் மினி ஏலம் இன்று (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெற்றது. 
ஐபிஎல் வரலாற்றில் அதிக கோடிகளுக்கு வாங்கப்பட்ட முதல் 5 வீரர்கள்

ஐபிஎல் மினி ஏலம் இன்று (டிசம்பர் 23) கொச்சியில் நடைபெற்றது. 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்க 991 வீரர்கள் பதிவு செய்தார்கள். அவர்களில் அணிகளின் விருப்பத்துக்கேற்ப 405 வீரர்கள் ஏலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அவர்களில் 273 இந்திய வீரர்கள், 132 வெளிநாட்டு வீரர்கள். இவர்களில் 119 வீரர்கள் சர்வதேச ஆட்டங்களில் விளையாடியவர்கள். இந்த 405 வீரர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 87 வீரர்கள் ஏலம் வழியாகத் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டிருந்தது. 

ஐபிஎல் 2022 போட்டியில் 14 தமிழக வீரர்கள் விளையாடினார்கள். இம்முறை ஏலத்தில் 16 தமிழக வீரர்கள் பங்கேற்றனர் .

இந்த ஏலத்தில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் சாம் கரணை ரூ. 18.50 கோடிக்குத் தேர்வு செய்தது பஞ்சாப். இதன்மூலம், ஐபிஎல் ஏலத்தில் அதிகத் தொகைக்குத் தேர்வான வீரர் என்கிற சாதனையை அவர் படைத்துள்ளார்.

ஐபிஎல் வரலாற்றில் அதிகத் தொகைக்கு வாங்கப்பட்ட முதல் 5 வீரர்கள் விவரம் பின்வருமாறு:

1. சாம் கரண் (இங்கிலாந்து)

விளையாடும் அணி - பஞ்சாப் கிங்ஸ் (2023)

ஏலத் தொகை - 18.5 கோடி

2.கேமரூன் கிரீன் (ஆஸ்திரேலியா)

விளையாடும் அணி - மும்பை இந்தியன்ஸ் (2023)

ஏலத் தொகை - 17.5 கோடி

3. பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து)

விளையாடும் அணி - சென்னை சூப்பர் கிங்ஸ் (2023)

ஏலத் தொகை - 16.25 கோடி

4. கிறிஸ் மோரிஸ் (தென்னாப்பிரிக்கா)

ஏலத் தொகை - 16.25 கோடி 
 
விளையாடிய அணி - ராஜஸ்தான் ராயல்ஸ் (2021) 

5. நிக்கோலஸ் பூரண் (மே.இ.தீவுகள்)  & யுவராஜ் சிங் (இந்தியா)

ஏலத் தொகை - 16 கோடி 

நிக்கோலஸ் பூரண் - லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் (2023)

யுவராஜ் சிங் - டெல்லி டேர்டவில்ஸ் (2015).

ஐபிஎல் 2023 சீசனுக்கான வீரர்கள் ஏலம் முடிவடைந்தது. 6 மணி நேரம் 10 நிமிடங்கள்  நடந்த ஏலத்தில், ரூ.167 கோடி செலவிடப்பட்டு 80 வீரர்கள்(29 வெளிநாட்டு வீரர்கள்) வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com