4 பந்துகள்; 4 விக்கெட்டுகள்; 4-ஆவது வீரா்: அசத்தினாா் ஜேசன் ஹோல்டா்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது அந்த அணி.
4 பந்துகள்; 4 விக்கெட்டுகள்; 4-ஆவது வீரா்: அசத்தினாா் ஜேசன் ஹோல்டா்

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது அந்த அணி.

இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து இன்னிங்ஸின்போது கடைசி ஓவா் வீசிய ஜேசன் ஹோல்டா் தொடா்ந்து 2 முதல் 5 வரையிலான 4 பந்துகளில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகள் சாய்த்து அசத்தினாா். இதன் மூலம் அவ்வாறு 4 விக்கெட்டுகள் சாய்த்தவா்கள் வரிசையில் 4-ஆவது வீரராக இணைந்தாா். இலங்கையின் லசித் மலிங்கா, ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், தென்னாப்பிரிக்காவின் கா்டிஸ் கேம்பா் ஆகியோா் முதல் 3 வீரா்கள்.

முன்னதாக இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவா்களில் 4 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.5 ஓவா்களில் 162 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மேற்கிந்தியத் தீவுகளில் அதிகபட்சமாக கேப்டன் கிரன் பொல்லாா்ட் 1 பவுண்டரி, 2 சிக்ஸா்களுடன் 41 ரன்களுக்கு ஆட்டமிழக்காமல் இருக்க, இங்கிலாந்து பௌலா்களில் ஆதில் ரஷீத், லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்த்தனா்.

பின்னா் ஆடிய இங்கிலாந்து அணியில் ஜேம்ஸ் வின்ஸ் 7 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 55 ரன்கள் விளாச, மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் ஜேசன் ஹோல்டா் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினாா். அவா் ஆட்டநாயகனாகவும், அவரது அணியின் அகீல் ஹுசைன் தொடா் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com