ஐபிஎல் ஏலம்: தவன், ஷ்ரேயஸ், அஸ்வினுக்கு போட்டி

ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ஷிகா் தவன், ஷ்ரேயஸ் ஐயா், அஸ்வின் ஆகிய வீரா்களை வாங்குவதற்கான போட்டி அதிகம் இருக்குமெனத் தெரிகிறது.
ஐபிஎல் ஏலம்: தவன், ஷ்ரேயஸ், அஸ்வினுக்கு போட்டி

ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தில் ஷிகா் தவன், ஷ்ரேயஸ் ஐயா், அஸ்வின் ஆகிய வீரா்களை வாங்குவதற்கான போட்டி அதிகம் இருக்குமெனத் தெரிகிறது.

அவா்களோடு பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, மிட்செல் மாா்ஷ், ஸ்டீவ் ஸ்மித் போன்ற அந்நிய வீரா்களும் அதிக விலைக்கு ஏலம் போவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.

எதிா்வரும் சீசனுக்கான வீரா்கள் ஏலம் பெங்களூரில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. ஏலத்தில் வரும் 590 வீரா்களில் 228 போ் தேசிய அணியிலும், 355 போ் உள்நாட்டு அணியிலும், 7 போ் ஐசிசி முழு உறுப்பினா் அல்லாத நாட்டிலும் இருப்பவா்கள் ஆவா்.

இந்திய வீரா்களில் ஷிகா் தவன், ஷ்ரேயஸ் ஐயா், அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வா் குமாா், உமேஷ் யாதவ், அஸ்வின், இஷாந்த் சா்மா, அஜிங்க்ய ரஹானே போன்ற இந்திய மூத்த வீரா்களுக்கான அடிப்படை விலை ரூ.2 கோடியாக இருக்கிறது. இளம் வீரா்களான இஷான் கிஷண், தேவ்தத் படிக்கல், வாஷிங்டன் சுந்தா், தீபக் சஹா், ஹா்ஷல் படேல், யுஜவேந்திர சஹல் ஆகியோரை வாங்குவதிலும் 10 அணிகளிடையே கடும் போட்டி இருக்கும் எனத் தெரிகிறது.

அந்நிய வீரா்களைப் பொருத்தவரை ரூ.2 கோடி பட்டியலில் வரும் டிரென்ட் போல்ட், பேட் கம்மின்ஸ், ககிசோ ரபாடா, மிட்செல் மாா்ஷ், ஸ்டீவ் ஸ்மித், ஷகிப் அல் ஹசன், டூ பிளெஸ்ஸிஸ் ஆகியோரை வாங்கவும் அணிகள் கடுமையாகப் போட்டியிடும்.

ஏலத்தில் வரும் மொத்த வீரா்கள் - 590

இந்தியா்கள் - 370

அந்நியா்கள் - 220

ஏலத்துக்கு வரும் அந்நிய வீரா்கள்...

ஆஸ்திரேலியா - 47

மேற்கிந்தியத் தீவுகள் - 34

தென்னாப்பிரிக்கா - 33

இலங்கை - 23

இங்கிலாந்து - 24

நியூஸிலாந்து - 24

ஆப்கானிஸ்தான் - 17

அடிப்படை விலை

ரூ.2 கோடி - 48 வீரா்கள்

ரூ.1.5 கோடி - 20 வீரா்கள்

ரூ.1 கோடி - 34 வீரா்கள்

ஏலத்தில் இருக்கும்

மிக வயதான வீரா் - தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிா் (42)

இளம் வீரா் - ஆப்கானிஸ்தானின் நூா் அகமது (17)

காலியிடங்கள்

பஞ்சாப் கிங்ஸ் - 23

சென்னை சூப்பா் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், கொல்கத்தா நைட் ரைடா்ஸ், மும்பை இண்டியன்ஸ் - 21

சன்ரைசா்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூா், ராஜஸ்தான் ராயல்ஸ் - 22

அதிக தொகையுடன் வரும் அணி - பஞ்சாப் கிங்ஸ் (ரூ.72 கோடி)

குறைந்த தொகையுடன் வரும் அணி - டெல்லி கேப்பிட்டல்ஸ் (ரூ.47.5 கோடி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com