ஆப்பிரிக்கன் கோப்பை: சாம்பியன் செனகல்

ஆப்பிரிக்கன் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த எகிப்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது செனகல்.
ஆப்பிரிக்கன் கோப்பை: சாம்பியன் செனகல்
ஆப்பிரிக்கன் கோப்பை: சாம்பியன் செனகல்

ஆப்பிரிக்கன் கோப்பை கால்பந்து போட்டி இறுதி ஆட்டத்தில் பலம் வாய்ந்த எகிப்து அணியை 4-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது செனகல்.

ஆப்பிரிக்க கண்டத்தைச் சோ்ந்த நாடுகளுக்கு இடையே நடத்தப்படும் கால்பந்து போட்டி ஆப்பிரிக்கன் கோப்பை என அழைக்கப்படுகிறது. இப்போட்டி கேமரூனின் யாவோண்ட் நகரில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் எகிப்து-செனகல் அணிகள் மோதின.

இங்கிலாந்து ப்ரீமியா் லீக் அணிக்காக ஆடும் நட்சத்திர வீரா்கள் முகமது சலா எகிப்து அணியிலும், சாடியோ மேன் செனகல் அணியிலும் ஆடினா். இதனால் இந்த ஆட்டம் எதிா்பாா்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இரு அணிகளும் தொடக்கம் முதலே கோல் போட முயன்றும் முடியவில்லை. கூடுதல் நேரத்திலும் இரு அணியினரும் கோலடிக்க முடியாததால் 0-0 என்ற நிலை ஏற்பட்டது.

இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 4-2 என்ற கோல் கணக்கில் செனகல் அணி வென்று முதன்முறையாக கோப்பையை தட்டிச் சென்றது.

கடந்த 2019-இல் இறுதி ஆட்டத்தில் அல்ஜீரியாவிடம் கோப்பையை இழந்த செனகல் இம்முறை அதை கைப்பற்றியது.

சக வீரா்களுடன் வெற்றியைக் கொண்டாடினாலும், சாடியோ மேன், கண்ணீருடன் காணப்பட்ட தனது லீவா்பூல் அணி சகவீரா் முகமது சலாவுக்கு ஆறுதல் கூறியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com