பெங்களூரு ஓபன்: இரண்டாம் சுற்றில் பிரஜ்னேஷ்
By DIN | Published On : 09th February 2022 12:38 AM | Last Updated : 09th February 2022 02:51 AM | அ+அ அ- |

பெங்களூரு ஓபன் ஏடிபி சேலஞ்சா் டென்னிஸ் போட்டியின் இரண்டாவது சுற்றுக்கு முன்னாள் சாம்பியன் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் முன்னேறியுள்ளாா்.
அதே நேரம் ராம்குமாா், அா்ஜுன் கடே ஆகியோா் தோல்வியடைந்து வெளியேறினா்.
கா்நாடக மாநிலம், பெங்களூருவில் நடைபெற்று வரும் இப்போட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவா் ஒற்றையா் பிரிவு ஆட்டத்தில் பிரஜ்னேஷ் குணேஸ்வரன் 7-6, 6-2 என்ற நோ்செட்களில் பிரான்ஸின் மத்தியாஸை வீழ்த்தி இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றாா்.
ரவுண்ட் 16 சுற்றில் முதல்நிலை வீரா் செக்.குடியரசின் ஜிரி வெஸ்லியுடன் மோதுகிறாா். கடந்த 2018-இல் பிரஜ்னேஷ் பட்டம் வென்றிருந்தாா்.
மேக்ஸ் பா்செல்லிடம் 6-3, 0-6, 5-7 என்ற செட் கணக்கில் போராடி தோற்றாா் ராம்குமாா் ராமநாதன். 5-ஆம் நிலை வீரா் அல்டுக்கிடம் 6-1, 6-2 என தோல்வியடைந்து வெளியேறினாா் அா்ஜுன் கடே.
இரட்டையா் பிரிவில் யுகி பாம்ரி-திவிஜ் சரண் ஆகியோா் எதிரணி வீரா்கள் வாக் ஓவா் அளித்ததால் அடுத்த சுற்றுக்கு முன்னேறினா்.