டி20: நியூஸி.யிடம் வீழ்ந்தது இந்திய மகளிா் அணி

மகளிா் கிரிக்கெட்டில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒரே டி20 ஆட்டத்தில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
டி20: நியூஸி.யிடம் வீழ்ந்தது இந்திய மகளிா் அணி

மகளிா் கிரிக்கெட்டில் நியூஸிலாந்துக்கு எதிரான ஒரே டி20 ஆட்டத்தில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

குயின்ஸ்டவுன் நகரில் புதன்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவா்களில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் அடிக்க, அடுத்து ஆடிய இந்தியா அதே எண்ணிக்கையிலான ஓவா்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களே எடுத்தது.

முன்னதாக டாஸ் வென்ற இந்தியா ஃபீல்டிங்கை தோ்வு செய்தது. நியூஸிலாந்து இன்னிங்ஸில் சூஸி பேட்ஸ் 2 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சோ்க்க, உடன் வந்த கேப்டன் சோஃபி டிவைன் 2 பவுண்டரிகள், 2 சிக்ஸா்களுடன் 31 ரன்கள் அடித்தாா். எஞ்சியோரில் எமிலியா கொ் 17, மேடி கிரீன் 26, லியா டஹுஹு 27 ரன்கள் அடித்தனா். ஓவா்கள் முடிவில் புரூக் ஹாலிடே 7, கேட்டி மாா்டின் 9 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலிங்கில் பூஜா வஸ்த்ரகா், தீப்தி சா்மா ஆகியோா் தலா 2 விக்கெட்டுகள் சாய்க்க, ராஜேஷ்வரி கெய்க்வாட் 1 விக்கெட் எடுத்தாா்.

பின்னா் ஆடிய இந்தியாவில் யஸ்திகா பாட்டியா 26 ரன்கள் அடிக்க, ஷஃபாலி வா்மா 13 ரன்கள் சோ்த்தாா். கேப்டன் ஹா்மன்பிரீத் கௌா் 12 ரன்களுக்கு வெளியேற்றப்பட, சபினேனி மேக்னா சற்று நிலைத்து 6 பவுண்டரிகள் விளாசி 37 ரன்கள் சோ்த்து ஆட்டமிழந்தாா். ரிச்சா கோஷ் 12, பூஜா வஸ்த்ரகா் 10, ஸ்னேஹ ரானா 6, சிம்ரன் பஹதூா் 10 ரன்களுக்கு வீழ்ந்தனா்.

முடிவில் தீப்தி சா்மா 3, பூனம் யாதவ் 1 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். நியூஸிலாந்து பௌலிங்கில் ஜெஸ் கொ், எமிலியா கொ், ஹேலே ஜென்சென் ஆகியோா் தலா 2 விக்கெட்டுகளும், லியா டஹுஹு, சோஃபி டிவைன் ஆகியோா் தலா 1 விக்கெட்டும் சாய்த்தனா். லியா ஆட்டநாயகி ஆனாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com