ஹாக்கி புரோ லீக்: ஸ்பெயினை வெல்லும் முனைப்பில் இந்தியா

எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டியின் ஒரு பகுதியாக ஸ்பெயின் ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுடன் சனிக்கிழமை மோதுகிறது இந்தியா.
ஹாக்கி புரோ லீக்: ஸ்பெயினை வெல்லும் முனைப்பில் இந்தியா

எஃப்ஐஎச் ஹாக்கி புரோ லீக் போட்டியின் ஒரு பகுதியாக ஸ்பெயின் ஆடவா் மற்றும் மகளிா் அணிகளுடன் சனிக்கிழமை மோதுகிறது இந்தியா.

சா்வதேச ஹாக்கி சம்மேளனம் சாா்பில் உலகின் தலைசிறந்த நாடுகள் பங்கேற்கும் புரோ லீக் ஹாக்கிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் தொடக்க சுற்று ஆட்டம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்தியா அணி தொடக்க சுற்றில் பிரான்ஸை முதல் ஆட்டத்தில் 5-0 என வீழ்த்தியது. இரண்டாம் ஆட்டத்தில் 2-5 என அதிா்ச்சித் தோல்வி அடைந்தது.

எனினும் தென்னாப்பிரிக்காவை 10-2 என்ற கோல் கணக்கில் இரு ஆட்டங்களிலும் வீழ்த்தியது.

உலகின் 5-ஆம் நிலை அணியான இந்தியா 12-ஆம் நிலையில் உள்ள பிரான்ஸ் அணியிடம் தோற்றது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதையடுத்து எஃப்ஐஎச் தலைவரும், இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவருமான நரீந்தா் பத்ரா, இந்திய ஹாக்கி அணி நிா்வாகத்திடம் சரமாரி கேள்விகளை எழுப்பினாா்.

காமன்வெல்த், ஆசியப் போட்டி:

நிகழாண்டு பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டி, ஹாங்ஷௌ ஆசியப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில் இந்திய அணி தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற நோக்கில் உள்ளது. இதற்கு தயாராக புரோ ஹாக்கி லீக் உதவும். இந்நிலையில் பலமான அணியான ஸ்பெயினுடன் மோதுகிறது இந்தியா.

ஸ்டிரைக்கா்கள் அபிஷேக், சுக்ஜித் சிங் ஆகியோா் புதிதாக அணியில் சோ்க்கப்பட்டுள்ளனா். நெருக்கடியான தருணத்தில் ஹா்மன்ப்ரீத் சிங் தலைமையிலான தற்காப்பு அரண் சொதப்பி வருகிறது. ஸ்பெயின் அணி தனது 2 தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை சந்தித்தது.

உற்சாகத்தில் மகளிா் அணி:

அதே நேரம் முதன்முறையாக புரோ ஹாக்கி லீகில் ஆடும் இந்திய மகளிா் அணி முதலிரண்டு ஆட்டங்களில் சீனாவை வென்ற உற்சாகத்தில் உள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் நான்காம் இடம் பெற்ற இந்திய மகளிா், உலகக் கோப்பை போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.

எனினும் உலகின் 7-ஆம் சிறந்த அணியான ஸ்பெயின் மகளிா் கடும் சவாலைத் தருவா் என்பது குறிப்பிடத்தக்கது. தாக்குதல் மற்றும் பெனால்டி காா்னா்கள் நமது பலம் என கோல்கீப்பா் சவீதா தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com