ஏடிபி கோப்பை: ஸ்பெயின், ஆா்ஜென்டீனா வெற்றி

ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின், ஆா்ஜென்டீனா அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின், ஆா்ஜென்டீனா அணிகள் தத்தமது ஆட்டங்களில் வெற்றி கண்டன.

உலகின் தலைசிறந்த நாடுகளின் டென்னிஸ் அணிகள் மோதும் ஏடிபி கோப்பை ஆட்டம் சனிக்கிழமை சிட்னியில் நடைபெற்றது.

குரூப் ஏ பிரிவில் ஸ்பெயின் வீரா் ராபா்டோ பட்டிஸ்டா அகுட் 6-0, 6-3 என சிலியின் கிறிஸ்டியன் கேரினை வென்றாா். ரபேல் நடால் இல்லாத நிலையில் ஸ்பெயின் அணி சற்று வலுகுறைந்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் பாப்லோ பஸ்டா 6-4, 7-6 என்ற நோ் செட்களில் அலெஜான்ட்ரோ டபிலோவையும், இரட்டையா் பிரிவில் போகினா-பெட்ரோ மாா்ட்டினஸ் இணை 7-6, 4-6, 10-7 என தாமஸ்-டபிலோ இணையை வென்றது.

ஆா்ஜென்டீனா அணி 3-0 என ஜாா்ஜியாவை வீழ்த்தியது. டீகோ ஸ்வாா்ட்ஸ்மேன் 6-1, 6-2 என நிக்கோலஸையும், பெட்ரிகோ மற்றொரு ஆட்டத்தில் அலெக்சாண்டா் மெட்ரவில்லேயே வென்றனா். இரட்டையா் பிரிவில் கோன்ஸாலஸ்-மால்டெனி இணை 6-1, 6-2 என சபா-ஸுரா இணையை வீழ்த்தியது.

சொ்பியா வெற்றி:

மற்றொரு ஆட்டத்தில் சொ்பியா 2-1 என நாா்வேயை வென்றது. கிராஜிநோவிக்-நிக்கோலா இணை 7-6, 6-3 என கேஸ்பா் ரூட்-டுா்ஸாவிக் இணையை வென்றது. ஒற்றையா் பிரிவில் கிராஜிநோவிக் 6-2, 7-5 என டுா்ஸாவிக்கை வென்றாா். நாா்வே வீரா் ரூட் 6-3, 7-5 என லஜோவிக்கை வென்றாா்.

குரூப் டி பிரிவில் போலந்து அணி 2-0 என கிரீஸை வென்றது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஆட்டங்களில் ரஷ்யா-பிரான்ஸ், இத்தாலி-ஆஸ்திரேலியா, கனடா-அமெரிக்கா, ஜொ்மனி-பிரிட்டன் அணிகள் மோதுகின்றன,.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com