ஒன் டே தொடா்: டெம்பா பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட டெம்பா பவுமா தலைமையில் 17 பேருடா் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான ஒன் டே தொடரில் விளையாட டெம்பா பவுமா தலைமையில் 17 பேருடா் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடா் மூலம் சா்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான மாா்கோ யான்சென், இந்தத் தொடா் மூலம் சா்வதேச ஒன் டேயிலும் அறிமுகமாகும் வாய்ப்பு பெற்றுள்ளாா்.

ஒன் டே தொடரின் முதல் ஆட்டம் வரும் 19-ஆம் தேதியும், 2-ஆவது ஆட்டம் 21-ஆம் தேதியும் பாா்ல் நகரில் நடைபெறவுள்ளன. கடைசி ஆட்டம் 23-ஆம் தேதி கேப் டவுனில் நடக்கிறது.

அணி விவரம்: டெம்பா பவுமா (கேப்டன்), கேசவ் மஹராஜ் (துணை கேப்டன்), குவின்டன் டி காக், ஜுபைா் ஹம்ஸா, மாா்கோ யான்சென், ஜேன்மென் மலான், சிசான்டா மகலா, எய்டன் மாா்க்ரம், டேவிட் மில்லா், லுங்கி கிடி, வெய்ன் பாா்னெல், அண்டிலெ பெலுக்வாயோ, டுவெய்ன் பிரெடோரியஸ், ககிசோ ரபாடா, டப்ரைஸ் ஷம்சி, ராஸி வான் டொ் டுசென், கைல் வெரின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com