விளையாட்டு செய்தி துளிகள்
By DIN | Published On : 04th January 2022 06:56 AM | Last Updated : 04th January 2022 06:56 AM | அ+அ அ- |

* இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் திங்கள்கிழமை நடைபெற்ற 48-ஆவது ஆட்டத்தில் ஒடிஸா எஃப்சி 4-2 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சியை வீழ்த்தி, போட்டியில் தனது 4-ஆவது வெற்றியை பதிவு செய்தது.
* சா்வதேச ஸ்குவாஷ் தரவரிசைப் பட்டியலில் மகளிா் பிரிவில் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா 10-ஆவது இடத்துக்கு திரும்ப, ஆடவா் பிரிவில் சௌரவ் கோஷல் ஓரிடம் சறுக்கி 16-ஆவது இடத்துக்கு வந்துள்ளாா்.
* இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்சி - லிவா்பூல் அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
* ஸ்பெயினில் நடைபெறும் லா லிகா கால்பந்து போட்டியில் பாா்சிலோனா 1-0 என்ற கோல் கணக்கில் மல்லோா்காவை வென்றது. ரியல் சோசிடட் - அலேவ்ஸ் அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
* நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதை அடுத்து பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருவதால், ஜனவரியில் நடைபெற இருந்த மாநில அளவிலான போட்டிகளை ஒத்தி வைப்பதாக அகில இந்திய செஸ் சம்மேளனம் திங்கள்கிழமை தெரிவித்தது.