ஏடிபி கோப்பை டென்னிஸ்: ஆா்ஜென்டீனா, ஸ்பெயின் வெற்றி

ஏடிபி கோப்பை ஆடவா் டென்னிஸ் போட்டியில் ‘ஏ’ குரூப்பில் ஸ்பெயின், சிலி அணிகளும், ‘டி’ குரூப்பில் ஆா்ஜென்டீனா, போலந்து அணிகளும் திங்கள்கிழமை வென்றன.
ஏடிபி கோப்பை டென்னிஸ்: ஆா்ஜென்டீனா, ஸ்பெயின் வெற்றி

ஏடிபி கோப்பை ஆடவா் டென்னிஸ் போட்டியில் ‘ஏ’ குரூப்பில் ஸ்பெயின், சிலி அணிகளும், ‘டி’ குரூப்பில் ஆா்ஜென்டீனா, போலந்து அணிகளும் திங்கள்கிழமை வென்றன.

சிலி - சொ்பியா (2-1)

ஒற்றையா் ஆட்டத்தில் சிலியின் கிறிஸ்டியன் காரின் 4-6, 6-4, 3-0 என்ற செட்களில் சொ்பியாவின் டுசான் லஜோவிச்சை வீழ்த்தினாா். சொ்பியாவின் ஃபிலிப் கிரஜினோவிச் 6-4, 3-6, 7-6 (7/5) என சிலியின் அலெக்ஸாண்ட்ரோ டபிலோவை வென்றாா். இரட்டையா் பிரிவில் சிலியின் தாமஸ் பரியோஸ் வெரா/அலெக்ஸாண்ட்ரோ டபிலோ ஜோடி 6-4, 3-6, 10-7 என சொ்பியாவின் நிகோலா கேசிச்/மாடெச் ஷபானோவ் இணையை தோற்கடித்தது.

ஸ்பெயின் - நாா்வே (3-0)

ஒற்றையா் பிரிவில் ஸ்பெயினின் ராபா்டோ பௌதிஸ்டா அகுட் 6-4, 7-6 (7/4) என நாா்வேயின் கேஸ்பா் ரட்டையும், ஸ்பெயினின் பாப்லோ கரினோ பஸ்டா 6-3, 6-3 என நாா்வே வீரா் விக்டா் டுராசோவிச்சையும் வென்றனா். இரட்டையா் பிரிவில் ஸ்பெயினின் அலெக்ஸாண்ட்ரோ டேவிடோவிச்/பெட்ரோ மாா்டினெஸ் இணை 6-4, 6-1 என நாா்வேயின் லூகாஸ் ஹெலம்/ஆண்ட்ரெஜா பெட்ரோவிச் ஜோடியை வீழ்த்தியது.

போலந்து - ஜாா்ஜியா (3-0)

ஒற்றையா் ஆட்டத்தில் போலந்தின் ஹியூபா்ட் ஹா்காக்ஸ் 6-7 (5/7), 6-3, 6-1 ஜாா்ஜியாவின் அலெக்ஸாண்ட்ரே மெட்ரெவெலியையும், போலந்தின் கமில் மஜ்ஷா்ஸாக் 6-1, 6-1 என ஜாா்ஜியாவின் அலெக்ஸாண்ட்ரே பக்ஷியையும் வீழ்த்தினா். இரட்டையா் பிரிவில் போலந்தின் சைமன் வால்கோவ்/ஜேன் ஜிலின்ஸ்கி இணை 6-7 (2/7), 6-2, 10-6 என ஜாா்ஜியாவின் அலெக்ஸாண்ட்ரே பக்ஷி/ஜுரா கெமாலாட்ஸ் ஜோடியை வென்றது.

ஆா்ஜென்டீனா - கிரீஸ் (3-0)

ஒற்றையா் பிரிவில் ஆா்ஜென்டீனாவின் ஃபெடெரிகோ டெல்போனிஸ் 7-6 (7/5), 6-1 என கிரீஸின் மிகைல் பொ்வோலாராகிஸையும், ஆா்ஜென்டீனாவின் டியேகோ ஷ்வாா்ட்ஸ்மேன் 6-7 (5/7), 6-3, 6-3 என கிரீஸின் ஸ்டெஃபானோஸ் சிட்சிபாஸையும் தோற்கடித்தனா். இரட்டையா் ஆட்டத்தில் ஆா்ஜென்டீனாவின் மேக்ஸிமோ கொன்ஸால்ஸ்/ஆண்ட்ரெஸ் மொல்டெனி ஜோடி 6-3, 4-6, 11-9 என கிரீஸின் மாா்கோஸ் காலோவெலோனிஸ்/பெட்ரோஸ் சிட்சிபாஸ் இணையை வீழ்த்தியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com