கோப்புப்படம்
கோப்புப்படம்

கடைசிப் பந்தில் எல்கர் அவுட்: 3-ம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 101/2

​இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.


இந்தியாவுடனான 3-வது டெஸ்ட் ஆட்டத்தின் 3-ம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் கேப்டவுனில் கடந்த 11-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 223 ரன்களும், தென் ஆப்பிரிக்க அணி 210 ரன்களும் எடுத்தன.

13 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிய இந்தியா ரிஷப் பந்த் சதம் காரணமாக 198 ரன்கள் எடுத்தது.

212 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடத் தொடங்கியது. கடந்த டெஸ்ட் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடியதைப்போல எய்டன் மார்கிரம் நேர்மறையான ஆட்டத்தை விளையாடித் தொடங்கினார். கேப்டன் டீன் எல்கர் நிதானம் காட்டினார். 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்த மார்கிரம் 16 ரன்களுக்கு முகமது ஷமி பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய கீகன் பீட்டர்சென் நேர்மறையான ஆட்டத்தைத் தொடர எல்கர் தொடர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

இந்த இணையைப் பிரிக்க முடியாமல் இந்தியப் பந்துவீச்சாளர்கள் திணறினர். 3-ம் நாளின் இறுதிவரை இந்த இணை தாக்குப்பிடித்துவிடும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில், ஜாஸ்பிரித் பும்ரா பந்துவீச்சில் ரிஷப் பந்தின் சிறப்பான கேட்ச்சால் எல்கர் ஆட்டமிழந்தார். அவர் 96 பந்துகளை எதிர்கொண்டு 30 ரன்கள் எடுத்தார்.

எல்கர் விக்கெட்டுடன் மூன்றாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த பீட்டர்சன் 61 பந்துகளில் 48 ரன்கள் எடுத்தார்.

இந்தியா தரப்பில் பும்ரா மற்றும் ஷமி தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டத்தில் இன்னும் இரண்டு நாள்கள் மீதமுள்ள நிலையில், தென் ஆப்பிரிக்க வெற்றிக்கு 111 ரன்களும், இந்திய வெற்றிக்கு 8 விக்கெட்டுகளும் தேவைப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com