தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள்: இந்தியா தோல்வி

தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள்: இந்தியா தோல்வி


தென் ஆப்பிரிக்காவுடனான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான முதல் ஒருநாள் ஆட்டம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 296 ரன்கள் எடுத்தது.

297 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்தியாவுக்கு கேப்டன் கேஎல் ராகுல் 12 ரன்களுக்கு பகுதிநேரப் பந்துவீச்சாளரான எய்டன் மார்கிரம் பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதன்பிறகு, ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி சிறப்பான பாட்னர்ஷிப்பை அமைத்தனர். தவான் அரைசதம் அடித்தும் பேட்டிங்கை தொடர விராட் கோலி அவருக்கு விக்கெட்டை பாதுகாத்து ஒத்துழைப்பு தந்தார். 2-வது விக்கெட்டுக்கு 92 ரன்கள் எடுத்த நிலையில், தவான் 79 ரன்களுக்கு கேசவ் மகாராஜ் சுழலில் பேல்டானார். அவரைத் தொடர்ந்து சிறிது நேரத்திலேயே விராட் கோலியும் அரைசதம் அடித்து 51 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

ஆனால், அடுத்தடுத்து களமிறங்கிய நடுவரிசை பேட்ஸ்மேன்கள் சோபிக்கத் தவறியதால் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. 

ஷ்ரேயஸ் ஐயர் 17, ரிஷப் பந்த் 16, வெங்கடேஷ் ஐயர் 2 என வரிசையாக ஆட்டமிழந்தனர்.

ஷர்துல் தாக்குர் மட்டும் தனிநபராக ரன் சேர்த்து கடைசிப் பந்தில் அரைசதம் அடித்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com