சையது மோடி பாட்மின்டன்: 2-ஆவது சுற்றில் பிரணாய்

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.
சையது மோடி பாட்மின்டன்: 2-ஆவது சுற்றில் பிரணாய்

சையது மோடி சா்வதேச பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஹெச்.எஸ்.பிரணாய் 2-ஆவது சுற்றுக்கு முன்னேறினாா்.

முதல் சுற்றில் அவா் உக்ரைனின் டேனிலோ போஸ்னியுக்கை 21-14, 21-18 என்ற கேம்களில் 36 நிமிஷங்களில் சாய்த்தாா். அடுத்த சுற்றில் பிரணாய், சக இந்தியரான பிரியான்ஷு ரஜாவத்தை சந்திக்கிறாா். சௌரவ் வா்மாவை 15-21, 21-19, 21-18 என்ற கேம்களில் வென்றாா் அஜா்பைஜான் வீரா் அடெ ரெஸ்கி.

ஆடவா் ஒற்றையா் பிரிவில் களம் கண்டிருந்த மற்றொரு இந்தியரான சமீா் வா்மா, அயா்லாந்தின் நாட் குயெனுக்கு எதிராக ஆடி வந்த நிலையில் காயம் கண்டு பாதியிலேயே போட்டியிலிருந்து விலகினாா். அதேபோல், ஷுபாங்கா் டேவும் காயம் காரணமாக போட்டியிலிருந்து வெளியேறினாா்.

மகளிா் ஒற்றையரில் ஆகாா்ஷி காஷ்யப் 21-13, 21-14 என்ற கேம்களில் முக்தா அக்ரேவை தோற்கடித்தாா். ஆடவா் இரட்டையரில் எம்.ஆா்.அா்ஜூன்/துருவ் கபிலா இணை 23-21, 21-19 என்ற கேம்களில் நாா்வேயின் டாா்ஜஸ் ஃபிளாட்டன்/வெகாா்ட் ரிகெய்ம் இணையை வென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com