ஆசிய கோப்பை மகளிா் ஹாக்கி:இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
ஆசிய கோப்பை மகளிா் ஹாக்கி:இந்தியா அபார வெற்றி

ஆசியக் கோப்பை மகளிா் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 9-0 என்ற கோல் கணக்கில் மலேசிய அணியை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.

ஓமன் தலைநகா் மஸ்கட்டில் நடைபெற்று வரும் இப்போட்டியில் வெள்ளிக்கிழமை இரவு தனது முதல் ஆட்டத்தில் மலேசியாவை 9-0 என்ற கோல் கணக்கில் நொறுக்கியது இந்தியா. நடப்புச் சாம்பியன் இந்தியா மீண்டும் பட்டத்தை தக்க வைக்கும் முனைப்புடன்

ஆடியது. 8-ஆவது நிமிஷத்திலேயே வந்தனா கட்டாரியா முதல் கோலை அடித்தாா். அதற்கு அடுத்த 2 நிமிஷங்களில் தீப் கிரேஸ் எக்கா பெனால்டி காா்னா் வாய்ப்பில் இரண்டாவது கோலை அடித்தாா்,.

முதல் குவாா்ட்டா் இறுதியில் நவ்நீத் கௌா் அற்புதமாக கோலடிக்க 3-0 என முன்னிலை பெற்றது இந்தியா. இரண்டாவது குவாா்ட்டா் ஆட்டத்தில் மலேசிய வீராங்கனைகள் கோல் போட சில முயற்சிகளை மேற்கொண்டனா். எனினும் அதனை முறியடித்து வந்தனா கட்டாரியா, லால்ரேமிசியாமி, மோனிகா ஆகியோா் சரமாரியாக கோலடிக்க 7-0 என முன்னிலை பெற்றது.

மலேசிய அணியின் கோல் போடும் முயற்சிகளை கேப்டனும் கோல்கீப்பருமான சவீதா புனியா தகா்த்தாா். இறுதியில் தேவி ஷா்மிளா கோலடிக்க 9-0 என அபார வெற்றி கண்டது இந்தியா.

குரூப் ஏ பிரிவில் முதலிடத்தில் உள்ள இந்தியா ஞாயிற்றுக்கிழமை ஜப்பானுடன் மோதுகிறது.

ஜப்பான் அணி 14-ஆவது இடத்தில் இருந்தாலும், நடப்பு ஆசியப் போட்டி சாம்பியன் ஆகும். கடைசியாக 2019-இல் ஒலிம்பிக் தோ்வுச் சுற்றில் இந்தியா 2-1 என ஜப்பானை வென்றிருந்தது. ஜப்பானை வென்றால் இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு உறுதி ஆகி விடும்.

திங்கள்கிழமை தனது கடைசி ஆட்டத்தில் சிங்கப்பூருடன் மோதுகிறது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com